Loading...

Articles.

Enjoy your read!

எம்மொழி செம்மொழி!!

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !

தமிழில் அறிவிற்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்ட மொழி.இத்தனை அறிவும் செழுமையும் அந்த காலத்திலேயே இவர்களுக்கு எப்படி இருந்தது என்பதே பலர் வியக்கும் கேள்வி.


ஒரு தாய்க்கும் கருவில் இருக்கும் சிசுவிற்கும் அன்பை பரிமாற்றம் செய்யும் "தொப்புள் கொடி" போன்ற உறவு தான் தமிழுக்கும் நமக்கும் உள்ள உறவு. ஒரு தாயானவள் எப்படி தன்னுள் உள்ள சிசுவிற்க்கு ஆற்றலை தொப்புள் கொடி மூலம் தருகிறாளோ.


அதுபோலவே நம் முன்னோர்கள் தாம் கற்ற அறிவையும் கண்டறிந்த கலைச்செல்வத்தையும் நம் மொழி மூலமே நமக்கு விட்டுச்சென்றுள்ளனர். இப்போது நடந்த சில ஆய்வுகளில் நம் மொழி" சுமார் " 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருந்தது என்கிறார்கள். உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் தோன்ற மூலகாரணம் நம் தமிழ் தான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் உலகில் வாழ்ந்த எல்லா இன மக்களுக்கும் நம் தமிழ் மொழியே தொப்புள் கொடியாக விளங்கி இருக்கும். மூன்று சங்கங்கள் வைத்து தமிழை கொண்டாடினர் நம் முன்னோர்கள்.

பெற்றவர்களை ஏன் "அம்மா , அப்பா", என்று கூப்பிடுகிறோம் ? எப்பொழுதேனும் யோசித்ததுண்டா? அந்த வார்த்தைகளுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன?

 

அ – உயிரெழுத்து.

ம் – மெய்யெழுத்து .

மா – உயிர்மெய்யெழுத்து.

 

அ – உயிரெழுத்து.

ப் – மெய்யெழுத்து .

பா – உயிர்மெய்யெழுத்து.

 

தன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை. தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவளாவாள். இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவதே "குழந்தை". எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இப்படி பட்ட அர்த்தங்கள் கிடையாது.

நமது "தமிழ்" மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!! இவ்வாறு எடுத்துக்காட்டுக்கள் பல கூறலாம். ஆனால், நம் மனதை உறுக்கிட இது ஒன்றே தாராளமானது.நம் முன்னோர்களின் அறிவும் ,திறமையும் வியப்பை மட்டுமே அளிக்கின்றது.அந்த வம்சாவளியில் வந்த நாம்  நிச்சயம் புண்ணியம் செய்தவர்கள் .


எம்மொழி செம்மொழி!!

Tagged in : Tamil, கிரிசேஷ் குமார்,

   

Similar Articles.