அழகிய உருவத்துடன் சிவந்த முகத்தோடு இருக்கும்
மழலையான உன்தோற்றத்தினால் மெய் மறந்தேன்
மறந்தும் கூட உன்னை ரசிக்காமல்
இருந்தது இல்லை பார்த்தபோ தெல்லாம்....
எல்லா வகையிலும் ஈர்க்கும் உன் குறை
இல்லா கட்டிட வடி வமைப்பு!
அமைப்பு வேண்டும் என்றார்கள்.........உன்னை
இமைப்பொழுதும் அருகில் இருந்து ரசிப்பதற்கு..
ரசிக்க மட்டுமல்லாமல்... உன்னிடத்தில் படித்து வாழ்வு
சிறக்கவும் எனக்கு அமைப்பினை அளித்தாய்!
அளிக்க நினைக்கும் அன்பு அனைத்தையும்
களிப்புடன் இந்த அந்தாதி வாயிலாக அளிக்கிறேன்.....
'CEG' என்னும் 'சிவப்பு அரசிக்கு'