படத்திற்குள் செல்வதற்கு முன் நாம் ஒரு குட்டி கதை தெரிந்துகொள்வது அவசியம். சீதக்காதியின்சொல்கேட்டு உமறு புலவர் சீறாப்புராணம் இயற்றினார். ஒரு முறை சீதக்காதி பயணம் மேற்கொண்டபோது, ஏழை ஒருவர் தன் மகளுடைய திருமணத்திற்கு பணம் தேவை என்று சொன்னார். அதற்கு சீதக்காதிபணம் கொடுக்க முன் வந்தார். ஆனால் அந்த ஏழை திருமணம் நிச்சயத்திற்குப்பின் நான் உங்கள் நாடுவந்து பணம் வாங்கிக் கொள்கிறேனென்று சொன்னார். சீதக்காதியும் சரி என்றார். காலம் கடந்தது. திருமண நாளும் வந்தது. அந்த ஏழை மனிதன் மிகவும் கடினமாய் பல மைல்கள் கடந்து அவர் நாட்டைஅடைந்தார். வந்த இடத்தில் சீதக்காதி இயறக்கை மரணம் அடைந்துவிட்டார் என்றார்கள். சோகமடைந்தஅவர் சீதக்காதியின் கல்லறைக்குச் சென்று, அவரது இறுதி மரியாதையை மன்னருக்குச் செலுத்தினார். திடீரென ஒரு கை அக்கல்லறையிலிருந்து வெளியே வந்தது. அதிர்ச்சியோடு பார்த்தார் அந்த ஏழை. சுற்றிப்பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் யாருமில்லை. மெதுவாக அந்த கை அருகில் போய் பார்த்தார். அது மறைந்த சீதக்காதியின் கையாகும். கொஞ்சம் உத்துப் பார்த்தார். அவரது விரலில் ஒரு முத்துகற்கொண்ட மோதிரம் இருந்தது. அது தானாகவே அவரது விரலில் இருந்து, அந்த ஏழையின் கால் கீழே வந்துவிழுந்தது. அம்மோதிரத்தைக் கண்ணீருடன் கையில் எடுத்து "செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என்றார். இக்கதையே இந்தப் படத்திற்கு பின்புலமாகும்.
இது விஜய் சேதுபதி அவர்களின் 25 ஆவது படமாக அமைந்துள்ளது. இந்த படத்தோட மிகப்பெரிய பலம்என்னவென்றால் கதையும் திரைக்கதையும் தான். கதை என்னமோ இயல்பான கதை தான், ஆனால் அதைஎடுத்த விதம், இந்தப் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய்விட்டது. திரைக்கதை இந்த படத்திற்குமெதுவாக இருந்தாலும், அவ்வேகம் தான் இந்தக் கதைக்கு அவசியம். இசை இந்தப் படத்தோட நல்லபொருந்திருக்குனு சொல்வதை விட இந்த படத்தோட வாழ்ந்திருக்கு. கோவிந்த் வசந்தா அவர்கள் இந்தப்படத்துக்கு தனது முழு ஆற்றலையும் பின்னணி இசையில் செலுத்தியிருக்கிறார்.
விஜய் சேதுபதி இந்த படத்தில் 20 நிமிடங்களே வந்தாலும், மீதி 152 நிமிடங்கள், அந்த 20 நிமிடங்கள் சார்ந்தேஇப்படம் இயங்கும் . அய்யா ஆதிமூலமா சேதுபதி இந்தப் படத்தில் வாழ்ந்திருக்கிறார். வசனத்திலும் சரி, நடிப்பிலும் சரி இவர் தமிழ் சினிமால ஒரு தனி இடத்தை தனக்கென்றே பிடித்திருக்கிறார்.
படத்தில் மற்ற நடிகர்களான ராம்குமார், பக்ஸ், மௌலி , மகேந்திரன் மேலும் பலர் பெரும்பங்குவகிக்கின்றனர். குறிப்பாக ராம்குமார் மற்றும் பக்ஸ் வருகிற ஒரு காட்சியில் நாம் எல்லோரும் வயிறுகுலுங்க சிரிப்போம். படத்தில் கதை ஒன்றியே போனா மக்களுக்கு சுவாரசியம் போயிரும்னு பாலாஜி பலஇடத்தில் தனது நகைச்சுவை தன்மையை வசனங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்திருக்கார். இப்படத்தில் "அவுரங்கசிப்” வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை, ஒரு காட்சியில் சொல்லுவார்கள். கதைக்கு அடித்தளமான காட்சி அது.
இப்படம் "கலைக்காகவும் கலைஞர்களுக்காகவும்" எடுக்கப்பட்ட ஒரு படம். இந்தப் படத்தில்கலைஞர்களின் வலி, ஏக்கம், மக்கள் பசி, கஷ்டம் போன்ற அனைத்தும், இயக்குனர் பாலாஜி திறமையாகமக்களுக்கு சொல்லியிருக்கிறார். கலைஞர்களின் உணச்சிகளை புரிந்த ஒரு மனிதனால் மட்டுமேஇப்படத்தை இயக்க முடியும். மற்ற படத்தைப் போல சண்டை காட்சிகளோ, பாடல் காட்சிகளோ, மசாலாத்தனமோ இல்லை. உண்மையான கலை ரசிகனாலும், கலை மீது மதிப்புடைய ஒரு மனிதனாலும் மட்டுமே இப்படத்தை ஏற்றுக்கொள்ள முடியும். இப்படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோகும். அதனால் எல்லாரும் தன் வாழ்க்கையில் ஒரு 172 நிமிடங்கள் இந்தப் படத்துக்காக ஒதுக்கிதிரையரங்குகளில் பார்க்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
"கலை - மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் அள்ளிப் பருக வேண்டிய அமிர்தம்”