நூறு நாட்கள் இந்தக் கல்லூரி தாயின் கருவில் வாழ்ந்து விட்டேன்...
பல உறவுகள்; பல பிரிவுகள்
பல ஊடல்கள்; பல காயங்கள்
அவை அனைத்தும்...
மனதை உடைத்து; உயிரைக் குடித்து
என்னை வதைத்துவிட்டன....
இனிவரும் நாட்களில்...
வலிகள் குறைந்து; காயங்கள் மறந்து
பிரிவுகள் அழிந்து மகிழ்ச்சியுடன் இருக்க...
இறைவா உன்னை வேண்டுகிறேன்...