அறிவின் ஒளியால் வருகைத் தாளைப் பதிவு செய்த கல்வியின் கருவூலங்கள் மட்டும் அல்ல அவர்கள்!!
பண்பின் ஒலிகொண்டு அனைவரையும் வியக்க செய்த அன்பின் அகராதிகள் அவர்கள்!!!
வாட்ஸ்ஆப்பில் நகைத்துக்கொண்டே நட்பைப் பரிமாறிய நவயுக நடிகர்கள் அல்ல அவர்கள்!!
வஞ்சம் விஞ்சிய வர்தாவிலும் நிறைந்த நட்பின் நறுமணத்தை நிலைக்காமல் வீசிய நட்பின் பொன்மலர்கள் அவர்கள்!!!
சீனியர்கள் பலர் அன்பினால் கூறிய வழியின் பின்னே நடந்தப் பாசப்பேரலைகள் மட்டும் அல்ல அவர்கள்!!
சீனியர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டிய அழியாத அரவணைப்பின் அளக்கவியலா அலைகள் அவர்கள்!!!
ஆம்!!!!
அவர்களே நம்முடைய ஆரஞ்சு டேக்ஸ்!!!
கிண்டி பொறியியல் கல்லூரியின் வரலாற்று ரத்தினங்கள்!
வர்தாவில் விடிந்து,
வான் போல் வளர்ந்து,
ஃப்ரெஷர்ஸில் இணைபிரியா உறுவுகளாகி,
க்ளப்புகளிலும் கேம்புகளிலும் பண்பையும் பாசத்தையும் பெரிதும் பரப்பி ,
அக்னி,டெக்கோஃபெஸ்-களில் கூட்டமாக எங்களுடன் ஆட்டங்கள் பலப் போட்டு,
எங்கள் மெல்லிய நெஞ்சங்களிலே பாசத்தின் பெருவிளக்கினை ஏற்றிய உங்களுக்கு ஃபேரவல் கொடுத்து வழியனுப்ப விடாமல் செய்ததே இந்த கொரோனா அரக்கன்!!!!!!
வர்தா முதல் கொரோனா வரை நீங்கள் எங்களுக்கு அளித்த மறக்காத நினைவுகளின் அழியா அலைகளில் கண்ணீர் மல்க தத்தளித்து உருகும் உள்ளங்கள் நாங்கள்!!!
என்றென்றும் அன்புடன் உங்கள் ஜுனீஸ்ஸ்ஸ்ஸ்!!!!!