Loading...

Articles.

Enjoy your read!

அமைதி

Silence

 

அமைதி ஒரு வெறுங்காகிதம்

எந்த எழுத்தாளனும்

கதை எழுதலாம்

 

அமைதி ஒரு வெள்ளைச்சீட்டு

எந்த ஓவியனும்

வண்ணம் தீட்டலாம்

 

அமைதி ஒரு சுத்தமான பாத்திரம்

அதில் திரவியங்கள்

பல ஊற்றலாம்

 

அமைதியே ஒலியின் பிறப்பிடம்

அமைதியில்லையெனில்

புது ஒலி கேட்காது

 

அமைதியே இல்லாமையின் குறி

 

அமைதியே இறப்பு

வாழ்வின் முடிவே அமைதி

 

அமைதியே பணிவு

நிறைகுடம் சத்தம் போடாது

 

அமைதியே வெறுமை

வெறுமையில்லையேல்

முழுமை கிடையாது

 

அமைதியே உண்மை

சத்தங்கள் கூறும் பொய்களிடமிருந்து

நம்மைக் காப்பாற்றும் உண்மை

 

இந்த உலகமே

அமைதிக்கடலில்

பட்டுத்தெறித்த

ஒரு பெரு ஒலி

 

அமைதியே அமைதி

அமைதியே நிம்மதி

அமைதி அமைதி

அமைதியோ அமைதி

Tagged in : Tamil, Puneeth Kumar,

   

Similar Articles.