கிண்டி டைம்ஸின் வாசகர்களுக்குத் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கிண்டி டைம்ஸ் ஆங்கிலப் புத்தாண்டுக்கு வாழ்த்து சொன்னால் எவரும் ஆச்சர்யப் படுவதில்லை. ஆனால், அதே கிண்டி டைம்ஸ் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொன்னால் புருவம் உயர்த்தும் முகங்கள் பல. தமிழ் புத்தாண்டு அன்று சில வதந்திகளை உடைக்க நாங்கள் நேற்று இரவு உறுதி எடுத்தோம்.
கிண்டி டைம்ஸின் தமிழ் முகம்
1. கிண்டி டைம்ஸில் நிறைய கவிதை கிறுக்கர்களும் குட்டி பாரதிகளும் உண்டு.
2. கிண்டி டைம்ஸில் தமிழ் கட்டுரைகளும் வெளிவரும்.
3. கிண்டி டைம்ஸ் இதழே தமிழிலும் வந்ததுண்டு.
4. தமிழில் ஆர்வம் உள்ள யார் வேண்டுமானாலும் எங்களுக்கு உங்கள் கட்டுரைகளை அனுப்பலாம். கோஹ்லியின் சதத்தைப் போல அவற்றை நாங்கள் மதித்துப் போற்றுவோம்.
5. இதைப் படிக்கும்பொழுதே " அட அப்படியா! எடுடா பேப்பர. எடுடா பேனாவ. கவிதை எழுதுடா கைப்புள்ள! " , என்போர் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் guindytimes@gmail.com
எங்களின் தமிழ் முகம் சற்றே அழகானதுதான். அதைப் பார்க்க தவறியோருக்காக நாங்கள் வருத்தம் கொள்கிறோம். பார்த்தவர்களுக்கு நன்றி சொல்கிறோம். இந்தத் தமிழ் புத்தாண்டில், எங்கள் தமிழ் முகம் மேலும் மலரும். அடுத்த இதழில் எங்கள் தமிழ் முகத்தைப் பார்க்க தவறாதீர்.