Loading...

Articles.

Enjoy your read!

’தி டெரரிஸ்ட்’

வெறும் லைட்ட மாத்தி மாத்தி அடிச்சிட்டு கண்ன கூச வைக்குற ஒளிப்பதிவாளர்கள் மத்தியில் அதை கலைத்தன்மையாய் அணுகும் ஒளிப்பதிவாளர்கள் மிகவும் குறைவு. அந்த வகையில் நான் மிகவும் நேசிக்கும் ஒளிப்பதிவாளர், சந்தோஷ் சிவன். ஒளியோட அடிப்படையை தெளிவாக புரிந்துவைத்துக்கோண்டு அதை இயற்கை மொழியோடு அணுகும் விதத்தில் அவருக்கு நிகர் அவரே.

இன்றைக்கு நாம பார்க்கப்போகின்ற உலக சினிமா ஓர் இந்தியப்படம் அதுவும் மலையால-தமிழ் படம். 1998 -இல் வெளியான "The Terrorist" என்ற இப்படம் வெறும் 15 நாட்களில் முழுக்க முழுக்க இயற்க்கை ஒளியமைப்புகளால் (Natural lighting)எடுக்கப்பட்டது. 50,000 செலவில் எடுக்கப்பட்ட இப்படம் அந்த ஆண்டுக்கான சிறந்த தமிழ் படத்தின் தேசிய விருதையும் பல்வேறு சர்வதேவ திரைப்பட விருதுகளையும் வென்றது. 


"A treat for both mind & eyes" - A.O Scott

என டோரன்டோ திரைப்பட விழாவில் பாராட்ட பெற்ற இப்படத்தின் கதைக்களம் தீவிரவாத மனித வெடிகுண்டு(Suicide bombing). இதையே களமாக வைத்துக்கொண்டு வந்த படங்கள் மிகவும் குறைவு. இந்த படம் வெளிவந்த அதே ஆண்டில் வெளிவந்த மணிரத்தினத்தின் படமான "தில் சே" கதையும் இதுபோல தான். ஆனால்,அவர் சொல்ல மறந்துவிட்ட ஓர் பெண்ணான  மனிதவெடிகுண்டின்  உள்கட்டமைப்புகளையும், மன எழுச்சிகளையும் சந்தோஷ் சிவன் "The Terrorist"இல் தத்ரூபமாக எடுத்துரைக்கின்றார். ராஜீவ் காந்தி படுகோலையை மையமாக வைத்தே இந்தக் கதையை எழுதினேன் என பல பேட்டிகளில் சந்தோஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.


படத்தோட கதை இதுதான், தன்னோட குடும்பத்தை இழுந்துவிட்ட ஒரு பெண்(பெயர்:மல்லி), தீவிரவாத முகாமில் சேர்ந்து  தன்னைத்தானே அழித்துகொல்லும் மனிதவெடிகுண்டாக மாறுவதிலிருந்து, அதன் பின் அவள் மேற்கொள்கின்ற பயணத்தை பற்றியது. ஒரு காட்டில் இருக்கின்ற ஆர்மி செக் போஸ்டை தாண்டி படகுல ஏறி வேறு இடத்துக்கு செல்ல வேண்டும்.அதற்காக அவளுக்கு உதவ ஒரு சிறுவன் வருகிறான், அவன் பேயர் "லோட்டஸ்"அந்த பயணத்துல அவன் உயிர்பிரிந்துவிடுகிறான். அவள் படகுல ஏறி மக்கள் வாழுற இடத்திற்கு சென்றுவிடுகிறாள். அங்க மூர்த்தி என்கிற பெரியவர் வீட்டில் தன்னை விதைநெல் ஆராய்ச்சியார் என அறிமுகப்படுத்திக்கொண்டு சிறிது காலம் தங்குகிறாள். பிறகு அவளுக்கே தெறியாமல்  கருவுற்றிருப்பது அவளுக்கு தெரிய வருகின்றது.அந்த தலைவரை சந்தித்து கொல்ல வேண்டிய விழாவும் நெருங்கிக் கொண்டே வருகின்றது. இதற்கு இடையில் அவள் மனதில் நடக்கும் மனப்போராட்டத்தையும், அவள் என்ன முடிவு எடுக்கப்போகிறாள் என்கிற பதட்டத்தையும்,இயற்கை மொழியோடு அழகாக வெளிப்படுத்துகிறது இப்படம்.

அடுத்து இப்படம் எனக்கு உலக சினிமாவாக தெறிவதற்கான காரணங்கள். முதல் காரணம் இந்த படத்தின் ஒலிப்பதிவும், ஒளிப்பதிவும். நிஜமாகவே காட்டினுள் பயணம் செய்வது போல் பறவைகளையும், அருவிகளையும், மழைச்சாரல்களையும் கொண்ட ஒலியமைப்பு. அடுத்து காட்சிவழியாக சொல்லபடுகின்ற உருவகங்கள்(Metaphor), உதாரணமாக அவளது முகமூடி ஆற்றில் அடித்து சென்ற அடுத்த காட்சியில் அவள் தனியாக சென்று ஒரு  ஆபீசரை சுட்டுக்கொல்வது, லோட்டஸ்ஸும் மல்லியும் காட்டில் ஒன்றுசேர்ந்து பயணிக்கும் பொழுது இரண்டு மழைத்துளிகள் காற்றில் அடித்துக்கொண்டு இலையில் ஒன்றாவது, என நிறைய எழிலோடு கூடிய காட்சியமைப்புகளாக படம் முழுவதும் பரவி இருக்கும்.
இரண்டாவது இப்படத்தின் இருமுகத்தன்மை. ஒருபக்கம் வெறி ஓர் அதீத உணர்ச்சியாக மாறி தீவிரவாதத்தின் அடிவேராக மாறுதல். அவள் வாழ்க்கையின் கொடூரமான இழப்புகள்.
மறுபக்கம் கதையின்.போக்கோடு விரிந்துகொண்டே செல்லும் அவளது வாழ்க்கைக்கான புரிதல்.

இந்த படத்தை ஒரு ஓவியம் வரைவது போல வரைந்துள்ளார் சந்தோஷ் சிவன். ஒரு புள்ளியில் இருந்து தொடங்கி அவர் ஒவ்வொறு காட்சி வழியாக வரைய வரைய, படத்தின் அழகு பெருகிக்கொண்டே செல்கிறது. இருதியாக ஓர் நல்ல படத்தை பார்த்தோம் என்ற திருப்தியை நம் மனதில் நட்டுவிட்டுச் செல்கிறது.

"ஒவ்வொரு முறை இப்படத்தை பார்க்கும் பொழுதும் ஒருவிதமான சோகம் கலந்த வெறுமையை இப்படம் என்னிடம் விட்டுச்செல்கிறது"
-ரோஜர் எட்பர்ட்(நியூயார்க் டைம்ஸ்)

இந்த கட்டுரையை படித்தவிடனே நேரம் கிடைத்தால் படத்தை பதிவிரக்கம் செய்து பார்த்துவிடுங்கள். "இத்தன நாளா இந்த படத்த பாக்காம விட்டுட்டோமே" என்று நான் சுவரில் முட்டிக் கொண்டிருப்பதைப் போல, நீங்கள் முட்டிக் கொள்வதையும் பார்க்க ஆசைப்படுகிறேன்.

நன்றி!

இந்த தொடரில் வந்த மற்ற கட்டுரைகளைப்படிக்க:
1. Rashomon - https://guindytimes.com/articles/1-19a6aabf-296f-488b-b535-38724202aff1
2. Bicycle Thieves - https://guindytimes.com/articles/mitivnntti-tiruttrkll

Tagged in : உலக சினிமா, நரேஷ் கிருஷ்ணன்,

   

Similar Articles.