Loading...

Articles.

Enjoy your read!

மிதிவண்டி திருடர்கள்

இன்று நாம் பார்க்கபோகிற படம் "பைசைக்கிள் தீவ்ஸ்". இது ஒரு இத்தாலியன் திரைப்படம். இந்த படம் வெளிவந்த ஆண்டு 1948. கிட்டதட்ட இந்த படம் வந்து ஒரு நூற்றாண்டு ஆனாலும் இன்றைக்கும் உலக சினிமா ரசிகர்களால பேசப்படுகிறது, பார்க்கப்படுகிறது, கொண்டாடப்படுகிறது. உலகத்தோட தலைசிறந்த படங்கள்ல எந்த வரிசைய எடுத்தாலும் இந்த படத்திற்கு ஒரு தனிஇடம்  இருந்துகொண்டே இருக்கிறது.

1948-அதாவது இரண்டாம் உலகப்போர் நடந்துமுடிந்த காலம். ஜெர்மனியோட சேந்து போர்ல தோத்ததால, இத்தாலியோட பொருளாதார நிலைமை அடிமட்டத்துல அப்போ இருந்தது. மக்கள் வேலை கிடைக்கிறதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டுட்டிருந்தாங்க. அந்த மக்கள்ல ஒருத்தன் தான் ஆன்டோனியோ(Antonio Ricci) அவனோட மனைவி மரியா(Maria), அவங்களுக்கு ஒரு பையன் ப்ரூனோ(Bruno) மற்றும் ஓரு கைக்குழந்தை. ஆன்டோனியோ ஒரு வேலைக்காக அலையிறதுல இருந்து படம் ஆரப்பிக்குது. அவனுக்கு ஒரு வேலையும் கிடைக்குது. விளம்பர போஸ்டர்கள ஒட்டுர வேலை. ஆனா அந்த வேலையில சேர்வதுக்கு ஒரு பைசைக்கிள் தேவை. என்கிட்ட மிதிவண்டி இருக்குனு பொய் சொல்லி அந்த வேலையில சேந்திடரான் ஆட்டோனியோ. மிதிவண்டிக்காக அவங்க வீட்டில் இருக்குர போர்வைகளை வித்திடறாங்க. இப்படியே அவன் வேலையில சேர்ந்து கொஞ்ச நாள் பொய்டிருந்தது.

ஒருநாள் அவன் போஸ்டர ஒட்டிருக்கும்போது  அவனோட பைசைக்கிள ஒருத்தன் திருடிட்டு ஓடிடறான். அவன எவ்வளவு விரட்டியும் பிடிக்க முடியல.

அதுக்கு பிறகு அந்த மிதிவண்டிய கண்டுபிடிக்கரதுக்காக அவங்க மேற்கொள்கிற முயற்ச்சிகளும், ஆண்டோணியும் அவனோட பையன் ப்ரூனோக்கும் இடையான அழகான உணர்ச்சி வெளிப்பாடுகளும்னு படம் வேற கட்டத்துக்கு நகரும்.

இந்த படத்த இன்ஸ்பையர் செய்து உலகத்துல வெளியான படங்கள் ஏராளம். தமிழ் சினிமாவுல 2007ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்துல வெளியான 'பொல்லாதவன்' படம் உங்க பலபேர்க்கு ஞாபகம் வந்திருக்கலாம். அதுமட்டுமில்லாம புகழ்பெற்ற பெங்கால் திரைப்பட இயக்குனரும், ஆஸ்கர் விருது வாங்குனவருமான சத்யஜித் ராய் அவரோட 'பதர் பஞ்சாலி' படத்துல வர பெரும்பாலான சீன்கள 'பைசைக்கிள் தீவ்ஸ்' இன்ஸ்பையர் பண்ணி எடுத்திருப்பாரு.

அடுத்தது ஏன் இந்த படம் இன்றைக்கும் கொண்டாடபடுது? ஏன் இது ஒரு அசாதாரண படமா இருக்குது. முதல் காரணம் இந்த படத்தோட கதைக்களமும், கதாபாத்திரங்களும், அதோட யதார்த்த தன்மையும். இந்த படத்துல இருக்கறது எளிமையான மனிதர்கள், தினமும் சாலையோரத்துல நம்முடைய பரிதாபத்துக்காக ஏங்குற மக்கள்.

அவங்களோட வலிய அவங்க மட்டத்துக்கு உள்ள சென்று எதார்த்தமா சொன்னதால இன்னைக்கும் இந்த படம் தனித்து நிக்குது. இந்த படத்தோட இறுதிக்காட்சில அவங்க வாழ்க்கையோட இயலாமைய, வேதனைய, குற்ற உணரச்சிய  திரைய தாண்டி அழுத்தமா பாக்குற நமக்கு எளிமயா கடத்தும் இந்த படம்.

முடிவில்லாத அந்த க்ளைமேக்ஸ்லதான் அந்த படத்தோட அழகு மறைந்துட்டிருக்கு. உண்மைலயே யார் திருடனுங்க?! தன்னோட நாட்டு மக்கள்மேல அக்குற இல்லாம, தனிப்பட்ட வெறியால உலகப்போர்ல கலந்துகிட்டு, இன்னைக்கு அவங்க மக்கள் உடைமைய தவறவிட்டுட்டு தவிக்குற நிலமைக்கு தள்ளுன சர்வாதிகார இத்தாலிய அரசு தான் உண்மையான திருடர்களுனு அங்க முகத்துல அரையுர மாதிரி சொல்லாம சொல்லுது இந்த "பைசைக்கிள் தீவ்ஸ்". இந்த  படம் 1950வது அகேடமி அவார்ட் வாங்குனதும் இல்லாம இத்தாலியன் நியோரலிஸம்(neoralism) படங்கள்ல ஒரு மாஸ்டர்பீஸ் படமாவும் விளங்குது.  நியோரலிஸம்னா என்னனும் இந்தியன் நியோரலிசம் படங்கள பத்தியும் அடுத்த கட்டுரையில பார்ப்போம்.

-----------

இந்த கட்டுரை எழுத்தாளரின் பெயர் ’இப்படிக்கு நரேஷ்’. சுருக்கமான காதல் கவிதைகளைத் தவிர்த்து இது போன்ற சினிமாக்களிலும் அவருக்கு ஆர்வம்.

Tagged in : Ulaga Cinema, நரேஷ் கிருஷ்ணன்,

   

Similar Articles.