Loading...

Articles.

Enjoy your read!

உதிரம் உதிர்த்து உதித்த சரித்திரம் சுதந்திரம்

ஆகத்து 15, 2021: இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகின்றது.

கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கும் மேலாக டச்சு,போர்த்துகிசியர்கள், பிரஞ்சு நாட்டவர்,ஆங்கிலேயேர்கள் என அந்நிய நாட்டு ஏகாதிபத்திய அடக்குமுறையில் அடிமைப்பட்டுக் கிடந்த நம் தாய்நாட்டின் நிலையை மாற்ற தம் இன்னுயிரை நீத்து நாட்டு விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்த தலைவர்கள் மற்றும் தியாகிகளை இந்நன்னாளில் நினைவுகூற வேண்டியது நம் கடமையாகும்.

பெரும்பாலான நேரங்களில், ஆகத்து 15-ம் நாள் ஆங்கிலேயேர் வசம் இருந்து நாட்டினை மீட்டெடுத்ததாகவே கருதப்படுகிறது. ஆனால், வரலாற்றைச் சற்று அலசிப் பார்க்கையில், அயல் நாட்டுப் படையெடுத்தலும் ஆதிக்கமும் 1800-களில் வந்தவை அல்ல.

1100 கி.பி. ஆண்டுதொடக்கத்திலேயே அந்திய நாட்டுப் படையெடுப்பு வந்துவிட்டது. மங்கோலியர்கள், துருக்கியர்கள் பாரசிகர்கள், அரேபியர்கள் என சிறிது சிறிதாக நாம் தாய் நாட்டினைப் படையெடுப்பின் மூலம் அடிமைப்படுத்தத் தொடங்கினர். இவர்களைப் பின்பற்றி பின்னர் மேலை நாட்டு போர்ச்சுகீசியர்களும், டச்சு நாட்டவரும்,ஆங்கிலேயேர்களும் 'கிழக்கிந்திய கம்பனி' மூலம் நம் நாட்டவரை அடிமைப்படுத்த ஆரம்பித்து விட்டனர். நம் மக்கள் தம் அடிப்படை உரிமைகளை இழந்தனர். தாய் நாட்டிலேயே அந்நியரிடம் தஞ்சம் பிழைக்கும் நிலை வந்திருந்தது. தொன்று தொட்டு இருந்த தன்னாட்சி பெற வேண்டும் என்ற எண்ணம் அதிதீவிர விடுதலை வேட்கையாக மாறி 1947ம் ஆண்டு விடுதலை பெற வழிவகுத்தது.

எனவே, ஆகத்து 15, 1947-ம் நாள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்திய நிலப்பரப்பு முழுவதும் மீண்டும் நம் நாட்டவரே ஆள சுதந்திரம் கொடுத்த சிறப்புமிக்க நாள் என்றால் அது மிகையல்ல. நம் சுதந்திரப் போராட்டத்தின் மிகப்பெரிய பலமே "சத்தியாகிரகம்" என்னும் வன்முறையற்ற போராட்டமே. தனது உயரிய அமைதி வழி கொள்கையினால், இந்தியாவின் விடுதலைப் போராட்டம் உலகம் முழுவதும் போற்றப்படும் முன்மாதிரியாக திகழ்கின்றது.

நம் சுதந்திர தினமான ஆகத்து 15 குறித்த சுவாரசியமான துணுக்குகள் : 

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் மற்றும் கடைசி வைஸ்ராயான லார்டு மவுண்ட்பேட்டன் இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயர்களிடம் ஜப்பான் சரண் அடைந்த நாளான ஆகத்து 15,1945 -ஐ நினைவு கூறும் பொருட்டு இந்தியாவின் சுதந்திர தினத்தையும் ஆகத்து 15 ஆக அறிவித்தார்.

பாகிஸ்தானின் சுதந்திர தினமும் ஆகத்து 15 அன்றே இருந்திருக்க வேண்டும். ஆனால் லார்டு மவுண்ட்பேட்ன் ஒரே நேரத்தில் இருநாட்டு சுதந்திர தின விழாவிலும் பங்கேற்க முடியாத காரணத்தால் பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை ஆகத்து 14,1947 என்று அறிவித்து, கராச்சியில் நடைப்பெற்ற விழாவில் பங்கேற்று விட்டு, மறுநாள் ஆகத்து 15,1947 டெல்லியில் இந்தியாவின் சுதந்திர தின விழாவில் பங்கேற்றார்.

இந்திய துணைக்கண்டம் சுமார் 4,500 வருட நாகரிக வரலாற்றைக் கொண்டது. இந்த 4,500 வருட நாகரிக வரலாற்றில்,இந்திய நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள் அந்நிய நாட்டைப் படையெடுத்து அடிமைப்படுத்தியது இல்லை. ஆனால், எண்ணிலடங்கா செல்வங்களைப் பெற்ற இந்நிய நிலப்பரப்பின் மீதே படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளது கசப்பான உண்மை.

75-ம் சுதந்திர தினமான இன்று‌ சமத்துவமும் சகோதரத்துவமும் கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய குடியரசாக இந்தியத் திருநாட்டின் சிறப்புகளையும் பெருமைகளையும்‌ மென்மேலும் வளர்த்துப் பறைசாற்றுவோம்.

Tagged in : INDEPENDENCEDAY, Freedom, AUGUST,

   

Similar Articles.