Loading...

Articles.

Enjoy your read!

தி ஷைனிங்

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக Stanley Kubrik-இன் பிறந்தநாள் வந்தது. இந்த எப்பிசோடில் நாம் பார்க்கப் போகிற படமும், எனக்கு பிடித்த, நான் பார்த்த ஸ்டான்லி குப்ரிக்கின் முதல் படமாகும். 'The Shining'  'It' , 'The Green Mile', 'The Mist' போன்ற நாவல்களை எழுதிய பிரபல எழுத்தாளரான Stephen King-இன் நாவலைத் தழுவி, 1980 இல் அதே பெயரில் எடுக்கப்பட்ட ஓர் ஹாரர் வகை ஜானர் திரைப்படம். ஸ்டான்லி குப்ரிக்கிடம் எனக்கு பிடித்ததே அவரது தனித்தன்மையும் எல்லா காட்சிகளிலும் மாறாத அவரது நேர்த்தியும்தான். "The Shining",  மற்றவகை horror படங்களிலிருந்து எப்படி எனக்கு மாறுபட்டு தெரிந்தது என்பதை இப்பொழுது காண்போம்.

ஜேக் டோர்ரான்ஸ் (Jack Torrance) என்னும் எழுத்தாளர், கொலோரேடோ ராக்கிஸ்(Colorado Rockies) என்னும் ஹோட்டலுக்கு சிறிது காலம் பராமறிப்பாளராக நியமிக்கப்படுகிறார். தனது மகள் Danny Torrance மற்றும் மனைவி Wendy Torrance உடன் யாருமில்லாத அந்த ஹோட்டலில் கொஞ்ச நாட்கள் தங்குகிறார். ஏற்கனவே அந்த ஹோட்டலில் முன்பாக பணியாளராக நியமிக்கப்பட்டிருந்தவர்,  அவரது இரண்டு பெண் குழந்தைகளையும் மனைவியையும் கோடாரியால் வெட்டிவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு செய்தி Jack Torranceக்கு கிடைக்கிறது. பிறகு அந்த ஹோட்டலில் நிகழும் அமானுஷ்ய நிகழ்வுகளும், மனித சக்திக்கு மீறி நடக்கும் சம்பவங்களுமே மீதி திரைக்கதை.

மனித மனம் மர்மங்கள் நிறைந்தது. கோபம், வன்மம், துக்கம் முதலியவற்றை உள்ளடக்கியது. ஓர் மனிதன் தனிமையை பெரிதாக உணரும் பொழுது  இவையெல்லாம் வெடித்து சிதற ஓர் சூழ்நிலையை எதிர்பார்த்து காத்திருக்கும். இதுவே இப்படத்தின் கதைக்கரு.

மற்ற வகை ஹாரர் படங்களிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகின்றது என்றால், அவை அனைத்துமே Moment of Impactஐ முன்னிறுத்தி எழுதப்பட்ட திரைக்கதைகள் (அதாவது a sudden shock). தி ஷைனிங் இல் இது சற்று முரணாகவே கையாள பட்டிருக்கும். எல்லா அச்சுறுத்தக்கூடிய காட்சிகளும் Subjective View ஆகவே (கதாபாத்திரங்களின் கோணம்) இருக்கும். குப்ரிக் மிக இயல்பாக, மெதுவாக, ஓர் நிலையற்ற தன்மையை, குழப்பமான மனநிலையைப் பார்வையாளர்களுக்கு அடுத்தடுத்த காட்சிகளில் எளிதில் கடத்திவிடுகிறார். கதாப்பாத்திரங்களின் குழப்பமான, பதட்டமான உணர்ச்சிகளை காண்பிப்பதற்காக  குப்ரிக் எல்லா Closeup காட்சிகளிலும் 18mm Lensஐ (wide angle-களுக்கு பயன்படுத்தப்படும்) உபயோகப்படுத்தியதாக அறிந்து கொண்டேன்.

Harrison Ford, Robert de Nero எல்லாம் படத்துக்காக ஒப்பந்தமாகி, பின்பு Stephen king-ஆல் நிராகரிக்கப்பட்டு, இறுதியாக ஜேக் நிக்கோலசன் படத்தினுள் இணைகிறார். போறபோக்கில் ஓர் மனநிலை பாதிக்கப்பட்ட கொலைகாரனின் நடிப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தையும் சொல்லாமல் சொல்லிவிட்டு போகிறார்.

இரண்டாவது,  Wendy Carlos, Rachael Elkind இசையமைத்துள்ள இப்படத்தின் பின்னனி இசை. படத்தையே பார்க்காமல் பின்னனி இசையை மட்டும் தனியாக எடுத்து கேட்டால், அது இந்த படத்தைவிட மிகவும் அச்சுறுத்துவதாக இருக்கும்.

இறுதியாக, வழக்கமான பேய் படங்களைப் பார்த்து அலுத்துவிட்டது என்றால் "THE SHINING" கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். இரண்டு மணிநேர உளவியல் அனுபவத்திற்கு நான் உறுதி!

Tagged in : உலக சினிமா, Ulaga Cinema,

   

Similar Articles.