Loading...

Articles.

Enjoy your read!

"பாரஸ்ட் கம்ப்"

1994 ஹாலியுட் ரசிகர்களால் மறக்க முடியாத வருடம். கல்ட் கிலாசிக்(Cult Classic) என அவர்களால் இப்பொழுதும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படுகின்ற மூன்று படங்கள். குவிண்டன் டாரன்டினோவின் Pulp Fiction, Shawshank Redemption; இறுதியாக நாம் இன்றைய எப்பிசோடில் பார்க்கப்போகின்ற பாரஸ்ட் கம்ப் (Forrest Gump).


எப்பொழுதெல்லாம் சோர்ந்து கிடக்கிறேனோ, அசிங்கப்படும் பொழுதோ, எதறக்கு இந்த உலகத்துல உலாவிட்டிருக்கோம் என்ற அரிய வகை கேள்வி என்னுள் எழும்பொழுதோ பாரஸ்ட் கம்ப் விடையாக இல்லாவிட்டாலும், அந்த விடைக்கான தேடலினன் உந்துதலாய் இருக்கும். 

நுண்ணறிவு எனப்படுகின்ற IQ குன்றிய ஒருவன் (Below 75) பேருந்திற்காக காத்திருக்கையில் அருகாமையிலல் உட்காருகின்ற அனைவரிடமும் தனது கடந்த கால வாழ்க்கையை நினைவு கூறுகிறான். இந்தக் கதையில் 1960-1980 வரை அமேரகக்காவில் நடந்த முக்கிய நிகழ்வுகளான Vietnam War(1955-1975), Black Panther Party, The Hippie Movement, Watergate Scandal, Smiley face முதலியவற்றை ஓர் ஆல்பமா இளைஞனின் பார்வையில் கற்பனை கலந்த எதார்த்தமாய் கூறிருப்பார்கள். 

எதார்த்தம். உண்மையில் எதார்த்தம் என்றால் என்ன? அன்றாட வாழ்வில் நிகழ்கிற, நிகழக்கூடிவிஷயங்களை மட்டுமே திரையில் காட்டுவதா?எனது பதில் அது மட்டுமே இல்லை என்பது! ஒரு எழுத்தாளனின் அல்லது திரைக்கதை ஆசிரியரின் கற்பனையை நாம் அன்றாட வாழ்வில்  நிகழ்ந்தவாரே நம்பகத்தன்மையுடன் கட்சிபடுத்துவதில் தான் இயக்குனரின் புத்திசாலித்தனம் ஒளிந்திருக்கின்றது. பாரஸ்ட் கம்பின் இயக்குனர் Robert Zemeckis ஓரளவு அதைச் சிறப்பாகவே செய்துள்ளார். 

இந்த பாரஸ்ட் கம்ப் பரவலான திரைப்படங்களிலிருந்து விலகி இருப்பதற்கான காரணங்கள். உதாரணமாக நமது தமிழ்ப் படங்களை எடுத்துக்கொள்வோம்; எல்லா பிளாஷ்பேக் சீன்களிலும்வரும் கதைகள் துல்லியமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். எல்லோரும் பொதுவாகசெய்கிற தவறு இதுதான், யார் அந்த பிளாஷ் பேக்கை கூறுகிறானோ அவனது பார்வையின்(Perspective) வழியாகக் கதை இல்லாமல் பொதுவான எழுத்தாளனின் பார்வைக்கு கதை நகர்ந்துவிடும். போதாக்குறைக்கு அந்த பிளாஷ்பேக்கில் பாடல்கள் வேறு. 

பாரஸ்ட் கம்ப் இந்த தவறுகளில் இருந்து முற்றிலும் வேறுபடும். அவன் பிறரிடம் சொல்கின்ற கதைகளில் ஒரே மாதரியான காட்சிகள் இரண்டு மூன்று முறை வருவது. வியட்னாம் போரில் இருக்கும் பொழுதுவானிலை சரமாரியாக மாறுவது என அந்தக்கதைகளில் ஒரு சராசரி மனிதன் செய்யக்கூடிய மறதியும் பிழைகளுமாய் ஒருங்கே காணப்படும். அதுவே இந்தப்படத்தின் நம்பகத்தன்மையின் கருவியாக அமைகிறது. 

எல்லாப் படத்திற்கும்  முதல் காட்சி மிக முக்கியம். இந்த படத்தின்முதல் காட்சி ஓர் இறகு பறந்து வந்து பாரஸ்ட் கம்ப்பின் காலில் விழும் காட்சி, கடைசி காட்சியும் இதுவே. இந்தக் காட்சி ஓர் அப்ஸ்டராக்ட் பெயின்டிங் (Abstract - An Art with Different Perspectives) போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். 


இந்தக்கதையில் வரும் பாரஸஸ்ட் கம்ப்பின் வாழ்க்கைக்கான ஒரே நம்பிக்கை அவனது சிறுவயது தோழியான ஜென்னி. இறுதிவரை புரிந்து கொள்ளவே முடியாத அன்பின் சோகமும், நினைவுகளால் நாம் நம்வாழ்வில் ஈர்க்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றோம் என்கிற அழுகும் அவர்களது காதல் காட்சிகளில் மறைவாக ஒளிந்துகொண்டிருக்கும். இது எனக்கு 2007 இல் ராம் இயக்கி வெளிவந்த 'கற்றதுதமிழ்' இல் வரும் பிரபா-ஆனந்தி கதாப்பாத்திரங்களை நினைவுபடுத்தியது. . 

அடுத்து இந்தப் படத்தில் நான் பேசப்போவது பின்னணி இசை. சிறந்த படம், சிறந்த இயக்குநர் என 6 அகேடமி விருது வாங்கிய இப்படம் பின்னணி இசைக்கான விருதை தவறவிட்டது இன்றும் ஆச்சரியமே. Alan Sylvestri இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு எந்த இடங்களில் இசை தேவையோ அதைச் சிறப்பாக கோர்த்தும் தேவையில்லாத இடங்களில் அமைதியாகச் சூழலின் இசையைப் படரவைத்தும் தேர்ந்த இசையமைப்பாளராய் தன்னை வெளிப்படுத்தி இருப்பார். ஒரு காட்சியில் ஜென்னிபாரஸ்ட் கம்ப்பை விட்டு விலகிச் சென்றுவிடுவாள். அடுத்துக் கிட்டத்தட்ட 1 நிமிடத்திற்குப் படத்தில் நிசப்தமே தென்படும். அவள் தன்னை விட்டுச் சென்ற வலியையும், எரிச்சலையும், வெறுமையையும் அந்த மௌனத்தின் மூலமாக எளிதாகக் கடத்துகிறார். 

அடுத்து இந்தப் படத்தில் வரும் வசனங்கள்.
"Life is a box of chocolates, you never know what you're gonna get! " 
"I may not be a smart man, but I know what love is" 
"We were like peas and carrot. Me and Jenny" 

இதுபோன்ற வசனங்கள் வெறும் வசனங்களாக மட்டுமே இல்லாமல் படத்தைக் குறிக்கின்ற ஹைக்கு கவிதைகளாகவே எனக்குத் தெரிந்தது. 
நான் மிக முக்கியமான வாசனமாக நினைக்கின்றது இதைத்தான், ஜென்னி பாரஸ்ட்டிடம் சொல்லும் "RUN FORREST RUN!".

இந்தக் காட்சி பிரச்சனையில் இருந்து தப்பிப்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால்இது மட்டுமே அல்ல, பிரச்சனையோடு சேர்ந்து ஓடுவது. இதுதான் படம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கும் வாழ்க்கை என்னும் பயணத்தில் வழி நெடுகிலும் ஓடும்பொழுது உங்களது பிரச்சனைகள், பாதி வழியிலேயே மூச்சிறைத்து உங்களை முழுமையாக அடைய முடியாது ஏக்கத்துடன் தமது ஓட்டங்களில் கரைந்துவிடும். "Forrest Gump" கூறும் கருத்தும் இதேதான்; ஓடிக்கொண்டே இருங்கள் பிரச்சனையிலிருந்து அல்ல, பிரச்சனைகளோடு. இறுதியாக இந்தப் படத்தை பார்க்கவில்லை என்றால் உடனே பதிவிறக்கம் செய்து பார்த்துவிடுங்கள். 

ஓடத்தயாராகுங்கள்!

----------------------------------

உலக சினிமாத்தொடரின் பிற கட்டுரைகள்:

https://guindytimes.com/articles/mitivnntti-tiruttrkll - Bicycle Thieves
https://guindytimes.com/articles/%27ti-tterristt%27 - The Terrorist
https://guindytimes.com/articles/1-19a6aabf-296f-488b-b535-38724202aff1 - Rashomon

Tagged in : உலக சினிமா, Ulaga Cinema, நரேஷ் கிருஷ்ணன்,

   

Similar Articles.