மனம் என்பது ஒரு ஆழமான கடல். அதில் மீன்கள் போன்ற எண்ணங்கள் உலாவிக் கொண்டிருக்கும். கடல் அலை மாறுவது போன்றே நம் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். ஒருமுறை சிறிய அலையாகவும் மறுமுறை பேரலையாகவும் இருக்கும். அந்தக் கடலில் என்ன உள்ளது, அது எவ்வளவு ஆழம் என்று யாராலும் கண்டுபிடிக்க இயலாத ஒன்று.
மனம் என்பது சிந்தனை, உணர்ச்சி, மனஉறுதி, கற்பனை போன்றவற்றை வெளிப்படுத்துகின்ற அறிவு மற்றும் உணர்வு நிலைச் சார்ந்த அம்சங்களின் தொகுப்பைக் கூறுகிறது. நாம் பல இடங்களில் கேள்விப்பட்டிருப்போம், மனதை அடக்க வேண்டும் ; மனம் போன போக்கில் போகக்கூடாது என்று. மனம் நம்மைக் கட்டுப்படுத்தக் கூடாது. மனமோ அடக்கப்பட வேண்டியவை அல்ல படவேண்டியவை.
ஒருபோதும் நம் மனதை அடக்க நினைத்தால் அது நமக்கு வேண்டாத ஆசைகளை உண்டாக்கும். மனம் விசித்திரமானது; கிடைத்ததை நினைத்து நிறைவடையாது; கிடைக்காததை நினைத்து தவிக்கும். மனதை புரிந்துகொள்ள அதிக விஞ்ஞான ஆராய்ச்சிகள் நடத்தினாலும், புரியாத புதிராகவே விளங்குகிறது. ஏனென்றால் வானிலை மாற்றத்தை விட மனம் மிகவும் வேகமாக மாறி வருகிறது.
நம் மனதில் லட்சக்கணக்கான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். அதை நம்மால் தடுக்க இயலாது. அதுமட்டுமில்லாமல் ஒருவனின் மனதின் ஆழத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. மனம் என்பது நம் உடலுக்கும் அறிவுக்கும் தொடர்புடைய ஒன்று. மனம் என்ற ஒன்று நம்மிடம் இல்லையென்றால் நம் உயிரோடு இருப்பதற்கான பயன் இருக்காது. நாம் நம் எண்ணங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும். மற்றும் நேர்மறை எண்ணங்கள் ஒழிந்தால் மட்டுமே நம் மனம் அமைதியைப் பெறும். மனம் என்ற ஒரு போர்க்கடலில் நல்ல எண்ணங்கள் மற்றும் தீய எண்ணங்கள் தோன்றினாலும் அதை நாம் மனதால் நேர்மறை எண்ணங்களாக மாற்றுவோம். தீய எண்ணங்களின் கூட்டு சேர, அதன் விளைவாக மன உளைச்சல் மன அழுத்தம் உண்டாகும்.
மற்றவர்கள் உயர்ந்தவர்கள் என்று நாம் என்னும்போது அது நம்மைத் தாழ்வு மனப்பான்மையில் தள்ளும். இத்தகைய விஷயங்களை மனதில் இருந்து வெளியேற்ற வேண்டும். மனம் என்பது ஒரு அழகான மெய்ப்பொருள். அதுவே அழகான ஆசைகளையும் மற்றும் நிறைவான எண்ணத்தையும் உண்டாக்கும். இந்தப் பேரழிவில் உள்ள மீன்கள் போன்று இருந்தாலும் நம் நேர்மறை எண்ணங்கள் அதில் நீராய் இருக்க வேண்டும். நேர்மறை எண்ணங்கள் என்ற நீர் இருந்தால் தான் ஆசைகள் என்ற மீன் உயிர் வாழ முடியும்.
இது அறிவுக்கு எட்டாது என்றாலும் நம் மனதைப் புரிந்து கொள்வது என்பது எளிது தான். ஆனால் என்றும் மனம் ஒரு புரியாத புதிராகவே விளங்குகிறது.