Loading...

Articles.

Enjoy your read!

எழில் நிரலாக்க மொழி - கணினித்தமிழர் முத்து அண்ணாமலை நேர்காணல்

கணினியில் பல மென்பொருட்கள் (Softwares) தற்பொழுது தமிழில் வந்துவிட்டது.  ஆனால், கணினிக்கு நாம் உத்தரவிடும் மொழியான நிரலாக்க மொழி (Programming Language) ஒன்று, முழுக்க முழுக்க தமிழிலேயே உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதன் பெயர் எழில்.அதுவும் ஒரு தனி நபரால், 8 வருட கால உழைப்பிற்குப் பிறகு உருவாக்கப் பட்டது என்றால் அது தமிழின் மீது அவருக்குள்ள காதலை எடுத்துரைக்கும்.  வாருங்கள்.  கணினித்தமிழரான திரு. முத்து அண்ணாமலை அவர்களோடு சற்று உரையாடுவோம்.

 


1. தங்களைப் பற்றி சற்று விவரிக்கவும்

முதலில் நான் ஒரு தமிழ் ஆர்வலர்நான் பிறந்து வளர்ந்தது எல்லம் சென்னையில் தான்நான் பொறியியலில், NIT திருச்சியில் ECE துறையில் Bachelors பட்டம் பெற்றேன்அதன் பிறகு, The University of Texas at Arlington-ல்  Electrical Engineering துறையில் Masters மற்றும் Ph.D பட்டம் பெற்றேன்தற்பொழுது அமெரிக்காவில் Boston நகரில் வசித்து வரும் நான், Software Engineer ஆக பணிபுரிந்து வருகிறேன்.  

 

2. எழில் நிரலாக்க மொழியைத் (Ezhil programming language) தோற்றுவிக்கும் எண்ணம் தங்களுக்கு எப்போது, ஏன் தோன்றியது?

பெரும்பாலான நிரலாக்க மொழிகள், ஆங்கிலத்திலே தான் உள்ளனதமிழில் ஒரு நிரலாக்க மொழி ஒன்றை உருவாக்க, எனக்கு முன்பு வந்தவர்கள் பலர் முயற்சி செய்து வந்தனர்.    

இதற்கு முன்னர்ஸ்வரம்என்ற தமிழ் நிரலாக்க மொழி, கணேஷ் என்பவராலும் அவரது நண்பர்கள் சிலராலும் உருவாக்கப் பட்டிருந்ததுஆயினும் அவர்கள் அதனுடைய Source code வெளியிடவில்லைஆகவே, அந்த மொழி மற்ற தமிழ்

ஆர்வலர்களால் மேம்படுத்த முடியாத வண்ணத்தில் இருந்ததால், அது பயன்பாடற்ற மொழியாகிவிட்டதுமேலும் அந்த நிரலாக்க மொழியை உருவாக்கியவர்களும் அதை வளர்க்க ஆர்வம் காட்டவில்லைஆயினும், இது ஒரு பாரட்டத்தக்க முயற்சி

மேலும் பலர் சிறிய அளவில் தமிழைத் தொழில்நுட்பத்திற்கும் கொண்டு வர முயன்றிருக்கின்றனர்ஆயினும் அந்த முயற்சிகள் எல்லாம் ஒரு முழுமையைப் பெறாத

காரணத்தினால், அது ஒரு கனவாகவே இருந்ததுகாரணம் ஒரு நிரலாக்க மொழியை உருவாக்க வேண்டுமென்றால், குறைந்தது 5 முதல் 10 ஆண்டு காலம் தேவை.

தமிழ் ஆர்வலரான எனக்கு, தமிழின் பரிணாம வளர்ச்சிக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவிட வேண்டுமென்ற ஒரு எண்ணம் சிறிய அளவில் இருந்து வந்ததுஆகவே, இது எனக்கான ஒரு வாய்ப்பாக 

எனக்குப் பட்டதுநான் இதை ஆரம்பித்த உடன், தமிழ் ஆர்வலர்கள் பலர் தன்னார்வலர்களாக இதற்கு கணிசமான முறையில் பங்காற்றினர்.

சுமார் 8 ஆண்டு கால உழைப்பின் பலனாக தற்பொழுது எழில், ஒரு முழுமையான நிரலாக்க மொழியாக உருவாகி விட்டதுஎழிலின் காப்புரிமையை நான் அனைவருக்கும் பயன்படும் வகையில் இலவசமாக வெளியிட்டேன்

தற்பொழுது, Free software license-ல் எழில் உள்ளதுபின்னர்,  ’Write code in Tamil’ என்ற புத்தகத்தை 2014-ல் வெளியிட்டோம்

 

3. எழில் நிரலாக்க மொழியின் அம்சங்கள் குறித்து சற்று விளக்கவும். 

ஆங்கிலம் சரிவர அறியாதவர்கள்ஆங்கிலம் அறிந்திருந்தாலும், தமிழின் மேல் பிரியம் கொண்டு இருப்பவர்கள் போன்றவர்களுக்காக கணினி இயக்க மொழியாகவும், மேலும் கற்பவர்க்கு மட்டுமின்றி, நிறுவனங்களிலும் உபயோகப்படுத்தக் கூடிய

தமிழ் நிரலாக்க மொழியாகத் தான் எழிலை நான் உருவாக்கினேன்இது தமிழை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல என்னுடைய சிறிய முயற்சிஎனினும், தமிழிலேயே எல்லாம் அமையும் என்பது ஒரு பொறியியல் சாத்தியக்கூறு கிடையாது.  

இருப்பினும், தாய்மொழி வழி கற்ற விடயங்கள் ஆழ்மனதில் எளிதாக சென்று பதியுமென்பதால், முதலில் எழில் நிரலாக்க மொழியைக் கற்றுக்கொண்டால், பின் C, C++, Python ஆகியவற்றைக் கற்க மிக எளிதாக இருக்கும்மேலும் ஒரு  மென்பொருளை (Software) உருவாக்குவதற்கான அத்தனை வசதிகளும் எழிலில் உள்ளது.  

 

4. ஆங்கில மொழி மோகம் அதிகரித்து வரும் வேளையில் தமிழ் வழியில் நிரலாக்க மொழியை கற்றுக்கொண்டு உபயோகப்படுத்த பயனாளர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று நம்புகிறீர்களா?

முதலில் எனக்கும் இந்த கேள்வி இருந்து வந்ததுசென்னை உள்ளிட்ட நகரங்களில், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், பெரும்பாலானோர் இதில் ஆர்வம் காட்டவில்லைஆனால்  என்று வகைப்படுத்தப்படும் 

திண்டுக்கல், பழநி போன்ற நகரங்களில், இந்த நிரலாக்க மொழியை ஆண்ட்ராய்டில் உபயோகிக்கலாமா என்றெல்லாம் கேள்விகள் கேட்டு மாணவர்கள் இதைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டினார்கள்ஆகவே, இது அனைத்து தமிழ் மக்களுக்குமானது

அல்ல என்று நான் உணர்ந்தே, என்னுடைய இலவச நேரத்தில் இதை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.  Open source ஆகவும், லாபமற்ற நோக்கிலும் எழில் நிரலாக்க மொழி உள்ளதால், கற்றுக்கொள்ள விரும்புவர்கள் எவ்விதத் தடையுமின்றி

கற்றுக்கொள்ளுமாறு தான் இதை உருவாக்கினேன்மேலும் தமிழை டிஜிடல் கணினி யுகத்தில் வாழ வைக்கும் ஒரு வெற்றிகரமான முயற்சியாக எழில் அமைந்ததில் எனக்கு பூரண திருப்தி.  
 

5. எங்கள் கல்லூரி மாணவர்களுக்காக சில வார்த்தைகள்.

கல்லூரி மாணவர்கள் தங்கள் திறமைகளைக் கண்டறிந்து மேம்படுத்திக் கொள்ள கல்லூரிக் காலம் ஒரு பொன்னான காலம் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். 

கணினித் துறையில் தங்களை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் மாணவர்கள், எழில் நிரலாக்க மொழியின் தளத்தைப் பார்க்கலாம்.  (https://sourceforge.net/projects/ezhillang/) . 

மேலும், அண்ணா யூனிவர்சிட்டி மாணவர்களை நான் Python / Open-Tamil or http://tamilpesu.us web projects ஆகிய துறைகளில் projects செய்வதற்கு வழிகாட்டியாய் (Guiding or mentoring the projects) இருப்பதற்குத் தயாராக உள்ளேன்.  விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் விவரங்களை (+91)9003791767 என்ற எண்ணுக்கு Whatsapp மூலம் தொடர்பு கொள்ளவும்.  மாணவர்களுக்கு அவரவர் துறையில் சிறந்து விளங்க என் வாழ்த்துகள்.

 

Tagged in : எழில்,

   

Similar Articles.