Loading...

Articles.

Enjoy your read!

சிரிக்கவைத்தமைக்கு நன்றிகள் !

"கிளியாட்டம் நா இருக்கும் போது ஒரு கீப் தேவையா?"  .

"அவசரப்பட்டு நீ ஏன் கீப் னு கன்பார்ம் பண்ற?" 

"அதான் ஆனந்துக்கு லெப்ட்ல போறாளே.

நம்ம ஊருல தான் 'கீப் லெப்ட்' ஆச்சே"

 

          - பம்மல்.கே.சம்பந்தம் படத்துல வர இந்த வசனத்துக்கு சொந்தக்காரர் 'கிரேஸி' மோகன் என்று அழைக்கப்படும் மோகன் இரங்காச்சாரி.  1952, அக்டோபர் 16 பிறந்த அவர் ' COLLEGE OF ENGINEERING  GUINDY 'யின் முன்னாள் மாணவர்.  மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்ச இவரு அவரோட கிளாஸ்ட்மேட் 'ரவி'ஓட உந்துதலும், வழிகாட்டுதலோட முழு நேர எழுத்தாளராகவும், நாடக ஆசிரியராகவும் அவரோட பயணத்த ஆரம்பிக்குறாரு.

          1972 ல இன்டெர் காலெட்ஜ் காம்பெிஷன்ல அவரோட முதல் நாடகமான "Great green robbery"ன்ற நாடகத்த எழுதி சிறந்த நாடகம் மற்றும் சிறந்த வசனத்துக்கான விருத கமல்ஹாசன் கிட்ட இருந்து வாங்குறாரு. அதான் அவஙக சந்திச்ச முதல் சந்திப்பு.  1976ல அவர் எழுதின முழு நீள நாடகமான  "Crazy theives in palavakkam" பயங்கர ஹிட் ஆனதோட 'கிரேஸி'ங்குற பட்டத்தையும் அவருக்கு தந்தது.  துக்கு அப்பறம் 1979 ல கிரேஸி கிரேஷன்ஸ் னு ஒரு நாடக குழு ஆரம்பிச்சு இந்தியா வெளிநாடுனு மொத்தம் 6,500 நடங்கங்கள திரையிட்டாங்க.

          கே.பாலச்சந்தர் ஓட 'பொய் கால் குதிரை' படத்துல முதன்முதலா வசனகர்த்தவா அறிமுகம் ஆகுறாருக்ரேஸி மோகன்.   .இன்னும்சொல்லபோனா அந்த படமே கிராசியோட நாடகமான "Marriage made in saloon” நாடகத்தோட மறுஆக்கம் தான். அதுக்கு அப்பறம் கமலஹாசனோட அவர் சேர்ந்து வசனம் எழுதின 'சதிலீலாவதி' 'காதலா காதலா' 'மைக்கல் மதன காம ராசன்' 'அபூர்வ சகோதரர்கள்' 'இந்தியன்' 'அவ்வை ஷண்முகி' 'தெனாலி' 'பஞ்சதந்திரம்'னு எல்லா படமும் எனக்கு மிகவும் நெருக்கமான, ரொம்ப புடிச்ச, நான்  நெனச்சு நெனச்சு சிரிக்குற காமெடி படங்கள்.  என்னதான்  'வசூல் ராஜா MBBS' சஞ்சய் தட் நடிச்ச 'முன்னாபாய் MBBS' ஓட ரீமேக்னாலும், அந்த படத்துல கிரேஸி செட் பண்ண ஹுமௌர் டோனும், லேயர் லேயரா அவரோட வசனத்துல இருக்க ஷார்ப்பான காமெடியும் இன்னமும் நல்ல பல பேர ரசிக்க வைக்குது.  ஒரு பத்து வருஷம் கழிச்சு பாத்தாலும் முதல் தடவ  கைத்தட்டி சிரிச்சிட்டே பாக்குற அனுபவத்த இன்னமும் தந்துட்டு இருக்கு.

 

                       'AESTHETIC PAINTING' ல நாட்டம் உடைய கிரேஸி, 60 கும் மேல பெயிண்ட் பன்னிருக்காரு. தினமும் ஒரு வெண்பா எழுதும் பழக்கமுடையவரான இவரு இந்த நாள் வரைக்கும் 40,000 வெண்பாவ எழுதிருக்காரு. இரட்டை அர்த்த வசனம், இங்கிலீஷ மாத்தி பேசுற டைலாக் டெலிவெரினு அறச்ச மாவையே அறச்சிட்டு இப்போ இருக்க தமிழ் சினிமா காமெடி படங்கள் மத்தியில , தன்னோட குழந்தைதனமான வசனத்தாலும், வார்த்தையை மட்டுமே கருவியா வச்சு எல்லாரையும் சிரிக்க வச்ச 'கிரேஸி' மோகன்  உண்மையிலேயே ஒரு லெஜெண்ட் தான். 

          67 வருடங்களாக எல்லாரையும் சிரிக்க வச்ச கிரேஸி மோகன் இப்போ ஒரேடியா பிரிஞ்சு எல்லாரையும் முதன்முதலா அழவைக்குறார். ஆழ்ந்த இரங்களோடு இந்த கட்டுரையை முடிக்கிறேன்.

         எனக்கு இப்ப இந்த இரங்கல் செய்திகளெல்லாம் படிக்கிற பொழுது அவர் எப்பயும் சொல்ற அந்த வார்த்த தான் நியாபகம் வருது;

   "TAKE IT EASY, LIFE IS CRAZY!"

Tagged in : Cinema,

   

Similar Articles.