Loading...

Articles.

Enjoy your read!

அன்புள்ள க்ரே டேக்ஸ்க்கு

அன்புள்ள க்ரே டேக்ஸ்க்கு,

பொருள்: சீனியர் கூறும் சில அறிவுரைகள்

எப்படி இருக்கீங்க? நலம் நலமறிய ஆவல். கல்லூரிலாம் பழகிவிட்டதா? மெஸ் சாப்பாடு ஓகேவா? சரி அதெல்லாம் இருக்கட்டும். படிப்புலாம் எப்படி போது? ஒரு நல்ல சீனியர்னா தன்னோட அனுபவங்கள பகிர்ந்துக்கனும். அனுபவம் தர பாடம் வேற எதுவும் தர்றாது. அதனால நா உங்களுக்கு சொல்லனும்னு நினைக்குற சில விஷயங்கள் தான் இந்த கடிதம்.

மொதோ வருசம், பெரும்பான்மையான பாடங்கள் பன்னிரண்டாம் வகுப்பு சம்மந்தப்பட்டதாகவும் எளிதாகவும்தான் இருக்கும். சரி பள்ளிலயே இவ்ளோ நாள் கஷ்டப்பட்டு முக்கி முக்கி தான் படிச்சேன். இனிமேட்டு ஜாலியா எஞ்சாய் பண்ண போறேனு மட்டும் நெனச்சுறாதீங்க. சினிமால வர மாதிரி இருக்காது கல்லூரி வாழ்க்கை. மொதோ வருசம் வாங்குற சி.ஜி.பி.ஏ தான் நாலு வருசமும் பின் தொடரும். இது தான் நிதர்சமான உண்ம. சி.ஜி.பி.ஏலாம் முக்கியம் இல்லடா, திறமைய வளத்துகிட்டா போதும்னு ஒரு கூட்டம் உங்கள தெச திருப்பலாம். பாத்து இருங்க! நம்பி ஏமாந்துறாதீங்க.

உங்க சி.ஜீ.பி.ஏ எங்க எங்கலாம் பயன்படும்னு சொல்லிடுறேன். சில டிப்பார்ட்மெண்ட்ல ரெப்பா இருக்குறதுக்கு கூட அது தேவ. கல்லூரி மாணவர் குழு ப்ரெசிடெண்ட் ஆவனும்னா அது தேவ. மூனாவது வர்ஷம் இண்டர்ன்ஷிப் போகுறதுக்கு சி.ஜி.பி.ஏ தேவ. நாலு வர்ஷம் காலேஜ் முடிச்சுட்டு எம்.எஸ் படிக்க போறீங்கனாலும் சி.ஜி.பி.ஏ ஒரு அளவுகோள். நம்ம கல்லூரில ஸ்டூடண்ட் எக்ஸ்சேஞ் ப்ரோக்ராம்(Student Exchange Program) அப்டினு ஒன்னு இருக்கு. ஆறு மாசம் வெளிநாட்டுல போயி வேற ஒரு பல்கலைக்கழகத்தில நீங்க படிக்கலாம். அதுக்கு கூட சி.ஜி.பி.ஏ தேவ. சரி இவ்ளோ சொல்றியே நீ என்ன டா ஒரு பண்டு பையனா? எவ்ளோ சி.ஜி.பி.ஏனு மட்டும் என்கிட்ட கேட்டுறாதீங்க. கல்லூரில வந்த புதுசுல எனக்கு இதெல்லாம் தெரியாது. ’தேவை’னு ஒன்னு இருந்தா தான அத நோக்கி போக தோனும்.

சரி, “படிச்சுகிட்டே இரு”, அப்டினு சொல்றியா?னு நெனைக்காதீங்க. கல்லூரில செய்யுறதுக்கு எவ்ளோ விசயங்கள் இருக்கு. என்.எஸ்.எஸ், என்.சீ.சீ, போட்டோகிராபி, விளையாட்டு, நண்பர்கள், உலா, சினிமா, மால், பீச். சென்னை வந்த புதுசுல எனக்கும் இதெல்லாம் எக்ஸ்ப்ளோர் பண்ணனும்னு ஒரு ஆச தான். பண்ணவும் செஞ்சேன். முடிஞ்ச அளவு மேடைகள பயன்படுத்துனேன். பள்ளியில இருக்கும்போது படிப்ப தவிற வேற எதுவும் சொல்லிக்கொடுக்கல. ஆனா நம்ம கல்லூரி நமக்கு எந்த வித திறமை இருந்தாலும் அத வெளிப்படுத்த ஒரு மேடை ஏற்படுத்திகொடுக்குது. அக்னி, டெகோஃபெஸ், கலாக்ரித்தி, குருக்‌ஷேத்ரா, ட்விஸ்டர்ஸ், கிண்டி டைம்ஸ், டிப்பார்ட்மெண்ட் சிம்போசியம்ஸ்னு சொல்லீட்டே போலாம். ஆனா இதெல்லாம் இரண்டாம் பட்சமா நாம வெச்சுக்கனும். மொதோ செமஸ்ட்டர்ல பல நண்பர்கள் கிடைப்பாங்க. கேங்க்(GANG) கேங்கா சுத்துவாங்க. ஆனா கண்டிப்பா உங்க துறை சார்ந்த நண்பர்களும் உங்க கிட்ட இருக்கனும். ஏனா அவங்க தான் கடைசி வரைக்கும் உங்க கூட வர போறவங்க.

நாம எதுக்கு இங்க வந்திருக்கோம்னு புரிஞ்சுக்கனும். நாம எல்லோரும் படிக்க வந்திருக்கோம். திரும்ப சொல்றேன், நாம் எல்லோரும் இந்த கல்லூரியில படிக்க வந்திருக்கோம். So, நாம எது முக்கியம்னு ‘Prioritize’ பண்ண கத்துக்கனும்.

STUDY + EXPLORE. இதுவே உங்க மந்திரமா இருக்கனும். படிப்பு முதன்மை.

”வாழ்க்கைல நாம இப்படீலாம் இருக்ககூடாதுனு தெரியுறப்ப அத மாத்துற வாய்ப்பு நம்ம கிட்ட இருக்காது”

தமிழ்நாட்டுல பலபேரோட உழைப்புல கட்டுன வரிப்பணத்துல நாம படிச்சுகிட்டு இருக்கோம். நாம feesஆ கட்டும் கட்டணம்லாம் ரொம்ப சொற்பமான அளவு. நாம படிப்பதற்கு அரசாங்கம் பொறுப்பேற்று தன் பணத்தை செலவு செய்கிறது. அதனால, நாம நமக்காக மட்டும் படிக்க கூடாது, நம்ம குடும்பத்துக்காகவும், சமூகத்துக்காகவும் படிக்கனும். நமக்குனு ஒரு Responsibility; சமூக பொறுப்புணர்வு இருக்கு. We are all privileged to study here. We have to utilize it. வாழ்த்துகள்.

Tagged in : Advice, Grey Tag, அறிவுரை, Raskolnikov,

   

Similar Articles.