Loading...

Articles.

Enjoy your read!

அச்சு - 2 ஆவணம்

சர்வ உயிரினங்களின் அடிப்படை குறிக்கோள் தங்களை ஆவணப்படுத்திக்கொள்வது. இது அவ்வவ்வுயிரினங்களின் இயல்பு சார்ந்து நடைபெறுகிறது. எல்லா உயிரினங்களின் ஆவணப்படுத்தும் அடிப்படை நெறிகளுள் ஒன்று இனப்பெருக்கம். தங்களது சந்ததிகள் மூலம் தங்களை ஆவணப்படுத்தும் முறை மிகவும் பரவலான துரிதமான வழி. உயிரினங்கள் அறிவு ரீதியாகப் பரிணாமமடைய அடைய, அவற்றின் ஆவணப்படுத்தும் முறையும் வளர்கிறது. மற்றபடி வேறுபாடு ஒன்றும் இல்லை. நுரைமம் நொதிப்பதும் ஒன்றுதான் கோவில் டுயூப் லைட்டில் உபயம் எழுதுவதும் ஒன்றுதான்மனிதனின் முயற்சி தொடக்காலத்தில் மிருகத்திடமிருந்து அவ்வளவு வேறுபாடுடையதாக இல்லை. கரடி மரத்தில் கீறிவைக்கிறது மனிதன் தன் உள்ளங்கைகளைக் குகைகளில் பதிக்கிறான்நியண்டர்தால் காலகட்டத்திலேயே இந்த உள்ளங்கைகளைப் பதிக்கும் முறை தொடங்கியுள்ளது, ஏறத்தாழ 40,000 வருடங்களுக்கு முன்பு. பிறகு அது மெல்ல மனித சாதுர்யத்தால் பரிணமித்து மான், எருது, காண்டாமிருகம், பறவை, மனிதன் என்று உருப்பெற்றது.ஒரு பொருளின் உருவப்படமாக இல்லாமல் ஓசையின் குறியீடாக எழுத்து வளர்ந்து வருவது ஏறத்தாழ 5,500 வருடங்களுக்கு முன்புதான்.

கிறிஸ்து வருடத்திற்கு 3,300 வருடங்களுக்கு முன்பு மெசெப்பொத்தேமிய பகுதியில் எழுத்து உருப்பெறுகிறது. உலகில் கண்டறியப்பட்ட முதல் மொழி சுமேரியன் மொழி (முதல் மொழி தமிழ் என்று விவாதிப்பது இத்தொடருக்கு அப்பாற்பட்டது).கிட்டத்தட்ட 600 குறியீடுகள் கொண்ட மொழி. முதலில் களிமண் ஏடுகளில் சுமேரியன் மொழி எழுதப்படுகிறது. வணிகம் மற்றும் கணக்கு சார்ந்தே இந்த ஏடுகளில் எழுதப்பட்டுள்ளன.சுமேரியாவில் கிடைத்த களிமண் எட்டில் “29,086 படிகள் பார்லி 37 மாதங்கள் குஷிம் ” என்று எழுதியுள்ளது .நாமறிந்த உலகின் முதல் பெயரிடப்பட்ட மனிதன் ‘குஷிம்’சுமேரியர்கள் ஆறை அடிப்படையாகக் கொண்டு அளவுகளை வகுத்துள்ளனர் ஆதலால்தான் இந்நாள்வரை 60 நொடிகள், 60 நிமிடங்கள், 360 டிகிரி என்றெல்லாம் ஆறு சார்ந்தவை. ஏட்டில் எழுத்துவதற்கென்றே ஒரு தனி நபர், மிகவும் மதிக்கப்பட்ட நபரும் கூட.

இவ்வாறு எழுதப்பட்ட சுமேரியன் மொழி ஒரு நிறைவு பெற்ற மொழி ஆகாது அது முதலில் இருந்த நிலையை வைத்துக்கொண்டு கடிதம் எழுத முடியாது, ஆணை பிறப்பிக்க முடியாது. அதனால் இயன்றது எல்லாம் வரி கணக்குகளைப் பதிவுசெய்வது மட்டுமே. பல வருடங்கள் கழித்துப் பல மாற்றங்களுக்குப் பிறகு சுமேரியன் மொழி கடிதம் எழுதவும் கட்டுரை எழுதவும் ஆணை பிறப்பிக்கவும் ஏற்றார் போல் மாற்றப்படுகிறது. சுமேரியாவில் கண்டெடுக்கப்பட்ட ஏடுகளை நோக்குகையில் ஏட்டில் எழுத்துவதற்கென்று பள்ளி நடத்தப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இருக்க 500 வருடங்கள் கழித்துச் சுமேரியா அகேதியர்களால் வீழ்த்தப்படுகிறது. அகேதியர்கள் சுமேரியன் எழுத்துக்களை அகேதிய மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள், நாம் தற்பொழுது ‘வணக்கம்’ என்பதை ஆங்கில எழுத்துக்களில் vanakam’ என்று எழுதுவதுபோல( இதனால் தான் எழுத்து என்பது ஒரு மொழியின் மூல கட்டுமானமல்ல என்பதாகச் சென்ற அத்தியாயத்தில் எழுதி இருந்தேன்). சுமேரியாவைத் தொடந்து எகிப்து எழுதத்தொடங்குகிறதுதற்பொழுது நமக்குச் சுமேரியன் மொழி தெரியுமா என்றால், நாம் சற்று அந்த மொழியைக் கணித்துளோம் அவ்வளவே. எப்படிக் குண்டலகேசி என்றொரு நூல் இருந்ததைக் கண்டறிவதற்குள் அந்நூல் அழிந்துவிட்டதோ அவ்வாறு சுமேரியன் என்றொரு மொழி இருப்பதைக் கண்டறிவதற்குள் அது அழிந்துவிட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அறிவு பரிமாற்றம் மிகவும் வியப்பூட்டக்கூடியது, அது அடுத்த அத்யாயத்திற்கானது.

அச்சிற்கும் இவ்வரலாற்றிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால்? களிமண் எழுத்துக்களும் ஒருவித அச்சு தான்எந்த ஒரு விஷயத்தையும் அதன் காரணக் காரியங்களுடன் விளக்கினால் சாலச் சிறந்தது. இது முழங்காலுக்கும் உச்சந்தலைக்கும் முடிச்சு என்கிறீர்களா?


புத்தகமென்பது பல பக்கங்களை ஒன்றாக இணைத்து , கடைகளில் விற்கும் பொருளென நினைப்பீர்களானால் பண்டைய மத்திய கிழக்கு நாடுகளில் புத்தகங்களே கிடையாது ”

- எலினார் ராப்ஸன்

Tagged in : PRINT, history, LANGUAGE, Books,

   

Similar Articles.