Loading...

Articles.

Enjoy your read!

ஆசிரியர் தினம் - சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

இந்தியாவின் குடியரசுத் தலைவர்களிலேயே மாணவர்களால் மிகவும்  நேசிக்கப்படுபவர்கள் இருவர்ஒருவர் டாக்டர் .பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களும், மற்றொருவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களும் ஆவர்இந்தியாவின் இரண்டாவதுக் குடியரசுத் தலைவர், இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவர் என்ற பதவிகளை எல்லாம் தாண்டி ஒரு சிறந்த ஆசிரியர் என்பதற்காகவே டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்றளவும் போற்றப்படுகிறார்

"தோன்றின் புகழோடு தோன்றுக" என்பார் வள்ளுவர்அதற்கேற்ப,  இவர் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் ஐந்தாம் நாள் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணியில் வீராசாமிக்கும், சீதம்மா அம்மையருக்கும் மகனாகத் தோன்றினார். தன்னுடைய பள்ளிப் படிப்பைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் பயின்ற இவர் தனது உயர்கல்வியைச் சென்னையிலும், வேலூரிலும் பயின்றார்

தத்துவவியலை விருப்பப் பாடமாகப் பயின்ற இவர் இந்தியாவின் பல்வேறு முன்னணிப் பல்கலைக்கழகங்களில் தத்துவவியல்  ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அப்பொழுதெல்லாம் மாணவர்களின் நன்மதிப்பை இவர் பெரிதும் பெற்று இருக்கிறார். மைசூர்ப் பல்கலைக்கழகத்தில் இவருக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்ட போது மாணவர்கள் இவரை ஒரு குதிரை வண்டியில் ஏற்றி குதிரைகளுக்குப் பதிலாக தாங்களே அவ்வண்டியினை அவருடைய இல்லம் வரை இயக்கி  தங்களது ஆசானுக்கு நன்றி செலுத்தினர். இதனைக் கண்டு மிகவும் மனம் நெகிழ்ந்துப் போனார் ராதாகிருஷ்ணன். இந்நிகழ்வின் மூலம் மாணவர்கள் இவர் மேல் கொண்டிருந்த அளவு கடந்த அன்பினை நம்மால் அறிய முடிகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் ஆங்கிலப்ப்புலமை அளப்பரியது. "மடை திறந்த வெள்ளம் போல்" ஆங்கிலம் பேசும் திறன் படைத்த ராதாகிருஷ்ணனின் புலமையை ஆங்கிலேயர்கள் வியந்துப் போற்றியுள்ளனர்.இந்தியாவில் முதன் முதலாக பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட மூவருள் இவரும் ஒருவர். மற்ற இருவரும் கூட தமிழநாட்டைச் சேர்ந்தவர்களே என்பது நம்மை பெருமை கொள்ளச் செய்கிறது.  இந்திய கலாச்சாரம், பண்பாடு போன்றவைகளைப் பெரிதும் மதித்தவர் டாகடர் ராதாகிருஷ்ணன், இவரை இந்தியாவின் கலாச்சாரத் தூதுவர் என்று கூட சொல்லலாம். டாக்டர் ராதாகிருஷ்ணன் தன் வாழ்வில் பல பொறுப்புகளையும், விருதுகளையும் பெற்றிருந்தாலும், தான் ஓர் ஆசிரியர் என்றே அறியப்பட விரும்பினார். இதன் காரணமாகவே இவரது பிறந்தநாள் இன்றளவும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ம் நாள் இம்மண்ணுலகை விட்டு மறைந்தாலும் மாணவர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று நிலைத்திருக்கிறார் .

Tagged in : birthday, TEACHER, TEACHERS DAY, SEPTEMBER,

   

Similar Articles.