Loading...

Articles.

Enjoy your read!

பூக்கள்

பூலோகத்தில் வசிக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் முன்னோடி தாவரங்கள்.‌ இவற்றில் காணப்படும் இனப்பெருக்க அமைப்புகளே மலர்கள் அல்லது பூக்கள் என்றழைக்கப்படுகிறது. அகத்தியர் பன்னீராயிரம் என்னும் நூல், வேங்கை மலர் பூக்கும் சித்திரை மாதமே புத்தாண்டு எனக் குறிப்பிடுகிறது.‌ ஒரு பூ மலர்வதை வைத்து ஒரு பண்டிகை உருவாவதைக் காணலாம்.   மலர்களின் பருவ நிலைக்கேற்ற பெயர்களை இங்கு காணலாம்:

அரும்பு அரும்பும் (தோன்றும்) நிலை

நனை அரும்பு வெளியில் நனையும் நிலை

முகை நனை முத்தாகும் நிலை

மொக்குள் - நாற்றத்தின் உள்ளடக்க நிலை

முகிழ் மணத்துடன் முகிழ்த்தல்

போது மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை

மலர் மலரும் பூ

பூ பூத்த மலர்

வீ உதிரும் பூ

பொதும்பர் பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை

பொம்மல் உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்

செம்மல் உதிர்ந்த பூ பழம் பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை

உல்ஃப்பியா என்ற பூ, உலகிலேயே மிகச்சிறிய பூ. இது ஒரு அரிசியின் அளவேயிருக்கும். உலகின் மிகப்பெரிய பூ சடல மலர் ஆகும்.

நறுமணமுடைய மலர்கள் திரைப்படப்பாடல்களில் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. “பூக்கள் பூக்கும் தருணம்... பார்த்ததாருமில்லையே..”, “பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்...”, “மலர்ந்தும் மலராத பாதி மலர் போல...”, “மலர்கள் கேட்டேன் அமுதம் தந்தனை...”, “பூவே... இளைய பூவே...”, “ஆயிரம் மலர்களே மலருங்கள்...” மற்றும் பூ பூக்கும் ஓசை அதைக் கேட்கத் தானே ஆசை...” எனப்பல‌பாடல்களைப் பட்டியலிடலாம். கவிஞர் வைரமுத்து, உழவன் என்ற திரைப்படத்திற்காக எழுதிய பெண்ணல்லபெண்ணல்ல ஊதாப்பூ...” என்ற பாடலின் ஒவ்வொரு வரியும் பூ என்று முடியும். இதுமட்டுமின்றி, “பாசமலர்”, “இரு மலர்கள்”, “நிறம் மாறாத பூக்கள்”, “பூவே பூச்சூடவாமற்றும் செம்பருத்திஎன்று திரைப்படப் பெயர்களும் உள்ளன.இவ்வாறு பூக்கள் மகிழ்ச்சி மற்றும் அழகின் உவமையாகக் கருதப்படுகிறது.

Tagged in : beautiful, random, flowers,

   

Similar Articles.