Loading...

Articles.

Enjoy your read!

அதிகரிக்கும் தெருநாய்களின் எண்ணிக்கை

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி, நாய்கள் (இராஜபாளையம், ஜோனாங்கி, கோம்பை) கூட்டமாய்  வளர்ந்து வந்தன என்று கல் ஓவியங்கள் புலபடுத்துகின்றன.

‘pariah' என்றழைக்கப்படும் இந்திய நாட்டு நாய்கள் பறையர் இன மக்களின் இனப்பெயரினைக் கொண்டு அமைக்கப்படுது என்கின்றனர். இன்று தெருக்களில் காணப்படும் நாய்கள் ‘pariah’ நாய்கள் அல்ல.

ஆங்கிலேயர்கள் தம் ஆட்சிக்காலத்தில், இந்தியாவில் அறிமுகப்படுத்திய மற்ற இன நாய்களோடு இனம் சேர்ந்து வந்தவையே இன்று காணப்படும் தெரு நாய்கள். இன்றையபோது 'stray dogs' (சுற்றித்திரியும் நாய்கள்) என்றழக்காமல் 'street dogs' (தெருக்களில் வசிக்கும் நாய்கள்) என்றழைத்து வருகின்றனர் பலர்.

இந்தியாவில் மக்கள் தொகை போலவே  தெருநாய் தொகையும் அதிகரித்து கொண்டு வருகின்றது. இதனால் தெருநாய் - மனிதன் இடையே இருந்த அமைதி குறைந்துவிட்டது. இதற்குக் காரணம், சரியான விலங்கு பிறப்பு கட்டுப்பாடு இன்மை, உரிமையாளரின் பொறுப்பின்மை, மக்களிடம் குறையும் விழிப்புணர்வு. விலங்குகள் நலனுக்கான சீராண சட்டம் இல்லாமை என்று அடுக்கிச்கொண்டே போகலாம்.

ரேபிஸ் நோய் பரவலுக்கு முக்கிய காரணமாக அமைவது தெருநாய்கள். இதனால் தெருநாய்களைக் கூட்டமாகக் கொன்று புதைத்தனர். அனால் அவைகளின் இனப்பெருக்க விகிதம் மிகவும் அதிகம் என்பதாலும் அது மனிதாபிமானமற்ற செயல் என்பதாலும் 2001 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் 'விலங்கு பிறப்பு கட்டுப்பாடு' முறையின் வாயிலாகத் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முயன்றனர். இதன் அடிப்படையில், தெரு நாய்களைப் பிடித்து அதற்குப் பிறப்புக் கட்டுப்பாடு சிகிச்சை செய்து, பிடித்த இடத்திலேயே விட்டுவிடுவார்.

சில இடங்களில் இம்முறை எதிர்பார்த்த முடிவுகளைத் தந்தாலும், மொத்தமாகப் பார்க்கையில் அதனின் தாக்கம் குறைவாகவே உள்ளது. இதற்கு ஒரு காரணம் உண்டு.  இறுதியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 6.2 கோடி தெருநாய்கள் உள்ளன. எண்ணிக்கையைக் கடுப்படுத்த குறைந்தது 70%, அதாவது 4.4 கோடி நாய்களுக்கு 6 மாத காலத்தில் பிறப்புக் கட்டுப்பாடு செய்ய வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு நடைபெறுவதில்லை.

இந்தியா போன்ற நாடுகளில்  எங்குத் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றதோ அங்குப் பிறப்புக் கட்டுப்பாடு திட்டம் மட்டுமே கையாளுவது அர்த்தமற்றது. எடுத்துக்காட்டுக்கு, 50% (3.1 கோடி) தெருநாய்களுக்கு பிறப்பு சிகிச்சை செய்தனர் என்று எடுத்துக்கொள்வோம். 3.1 கோடி நாய்களில் பாதி (1.55 கோடி) பெண் நாய்களே. ஒரு பெண் நாய் சராசரியாக 5 குட்டிகள் இடும். இவ்வாறு 7.75 கோடி நாய்க்குட்டிகள் 6 மாதத்தில் பிறக்கின்றன. இதில் பாதி குட்டிகள் ஓர் ஆண்டுக்கு முன்னரே இறக்கின்ற. இறுதியாகப் பார்க்கையில் முன் இருந்த அதே எணிக்கையே (6.2 கோடி) மீண்டும் எட்டி விடுகிறது.

 

உரிமையாளர்களின் பொறுப்பின்மைக்கு இதில் பெரிதும் பங்கு உள்ளது. வீட்டில் வளர்க்கும்  நாய்களைச் சரியாகப் பராமரித்தாலே கால்பங்குப் பிரச்சனை  தீர்ந்துவிடும். நாய்களைப் பொருட்கள்போல அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தலை அகற்றுதல், தெருநாய்களை தத்தெடுத்து வளர்த்தல், இந்திய அரசாங்கமுடன் ஒன்றிணைத்து உதவுதல், ஆகியவற்றை செய்தால் மட்டுமே தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி சமநிலையை உண்டாக்க முடியும்.

Tagged in : pet lover, population, street dogs,

   

Similar Articles.