Loading...

Articles.

Enjoy your read!

பிரிவு

செடிகளின் பிரிவு பூக்களைத் தந்தது

மரங்களின் பிரிவு கனிகளைத் தந்தது

மேகத்தின் பிரிவு மழையைத் தந்தது

கோடையின் பிரிவு குளிரைத் தந்தது

கூட்டின் பிரிவு சிறகைத் தந்தது

மழையின் பிரிவு வானவில் தந்தது

விதையின் பிரிவு வளர்ச்சியைத் தந்தது

சிப்பியின் பிரிவு முத்தைத் தந்தது

நதிகளின் பிரிவு ஆறுகளைத் தந்தது

மலரின் பிரிவு தேனைத் தந்தது

பணத்தின் பிரிவு பொருளைத் தந்தது

நினைவுகளின் பிரிவு இக்கவிதையைத் தந்தது !

Tagged in : pirivu, nature, just random,