Loading...

Articles.

Enjoy your read!

ஆப்பரேஷன் சிந்தூர்!

ஆப்பரேஷன் சிந்தூர்!

 

நம் நாடு ஒரு முக்கிய போராட்டத்தைக் கையில் எடுத்தது. ஆப்பரேஷன் சிந்தூர்! ஒரு ரகசிய ராணுவ நடவடிக்கை, தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி. ஆனால் இந்த நடவடிக்கையை அனைவரும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. இது தேச பாதுகாப்புக்கு அவசியமா? அல்லது ஜனநாயகத்தின் மீதான தாக்கமா?

 

“எல்லையில் நிற்கும்    வீரர்கள், தீவிரவாதத்தை அடக்க தவறினால், நாடே அழிவடையும். ஆப்பரேஷன் சிந்தூர் என்பது நாட்டின் பாதுகாப்புக்காக எடுத்த தவிர்க்க முடியாத நடவடிக்கை. தீவிரவாதிகளால் இந்திய மக்கள் அநியாயமாக கொலைசெய்யப்பட்டனர் – இது அவர்களுக்கான நியாயமான பதிலடி! என்று ஒரு பக்கம். “ராணுவ நடவடிக்கையில் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில், மனித உரிமைகள் அழிக்கப்படுகின்றன. இதுபோன்ற முடிவுகளைத் தடாலடியாக எடுப்பதைப் தவிர்க்க வேண்டும்” என்று மற்றும் ஒரு பக்கம்.

 

மேலும் “வந்தே மாதரம் என்று சொல்லுவது மட்டும் போதாது. தேசத்துக்காக உறுதியும் தேவை. சில நேரங்களில் கடுமையான முடிவுகள் தேவைப்படும். பார்வைக்கு மோசமாகத் தோன்றலாம் – ஆனாலும், நாட்டின் எதிர்காலத்தைக் காப்பதற்கான நியாயமான போராட்டம் இது. இந்த நடவடிக்கை எந்த ஒரு ஐநா விதிகளையும் மீறவில்லை. இது ஒரு நியாயமான நடவடிக்கை.” என்று இந்த முடிவை ஆதரித்தும்; “எந்த நடவடிக்கையும் பொது மக்களைக் கவனத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டும். மலையோர கிராமங்களைச் சுற்றி கண்காணிப்பு, இரவு அதிரடி – இது அவர்களின் வாழ்க்கையைக் கடுமையாகப் பாதிக்கிறது. இது பாதுகாப்பா அல்லது மக்கள் மீது கட்டுப்பாடா? பொதுவாகப் படைத்துறை நடவடிக்கைகள் தெளிவுடன் விளக்கப்பட வேண்டும். இந்த ஆப்பரேஷன் ரகசியமா? யாருக்கு எதிராக? எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர்? நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் இப்படி செயல்படுவது ஜனநாயகத்துக்கு எதிராகும்.” என்று இதை எதிர்த்தும் இரு வேறு கருத்துகள் இன்றளவும் நிலவிக்கொண்டுதான் இருக்கிறது.

 

தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டமா? அல்லது ஜனநாயகக் கொள்கைகளின் மீதான தாக்குதலா? ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து நமக்கு பல பார்வைகள் உள்ளன. நம் தேசப் பாதுகாப்பும் முக்கியம்; அதே சமயம் மனித உரிமைகளும் முக்கியம். முடிவை தீர்மானிக்க வேண்டியது மக்கள் நீங்களே!

 

பிரசண்யா ப

2ஆம் ஆண்டு

வேதிப் பொறியியல்

 

 

Tagged in : #war,