Loading...

Articles.

Enjoy your read!

96 - A bilingual movie review!

“People change, memories don’t!” - This will be the most suitable one liner for this movie. The movie revolves around two time periods and the team hasn't failed to impress us in both the timelines. Vijay Sethupathi after his action-packed performance in CCV has played a casual and beautiful role in this movie. Trisha has made a massive comeback after the movie Kodi.

Moving to the plot, the film starts by introducing Ram (VJS), who is passionate about the work he does. He’s basically a travelling photographer and he’s a master in it too. He has students following his work. The movie becomes very engaging when Ram visits his school by chance while passing by Tanjore.  After a very elaborate conversation in a WhatsApp group with his schoolmates, they decide to organize a reunion.

“One’s first love will always have a special place in one’s heart”

As soon as Ram knows about the arrival of his first love, Janu (Trisha), at the reunion, he goes back to his world in the year 1996. This flashback portion plays a major part in this film. This sequence clearly depicts how poignant first love is and how much important the character Janu is in Ram’s life. The flashback sequence is very indulging and makes the audience traverse thoughtfully into their classroom. Each and every frame is taken in such a way that everyone gets nostalgic about his or her school days.

Ram then leaves his hometown, which makes them get separated for a while. When Janu meets Ram at the reunion after a very long time, she enters into her world of 1996 and begins to feel how much she has missed and yearned for him. After the reunion party, being free from the company of other classmates, finally, Ram and Janu spend time together and talk about their past and present. They clarify all their misunderstandings and soon they go on to continue their paused love story.

A particular frame where Janu starts imagining and explaining their love to Ram’s students is one of the epic scenes in this movie. The love sequences are beautifully captured by the cinematographer and they are also unique. Govind Vasantha is the hero of this film, giving suitable and soothing BGMs and songs for the movie. The director C.Premkumar has carried the movie very beautifully.

The story is raw and the details are carved in every frame which makes the movie seem slow but after seeing this movie, those who have once been Ram / Janu in their lifetime will start to think about their first love!

ராம் . . . ஜானு இவ்வளவு தாங்க படம்


ரெண்டு பேர், நம்மளையும், நம்மளோட மறுபாதியையும் குறிப்பிடற ரெண்டு கதாப்பாத்திரம்.

இதுக்கு மேல ஒரு காதல் கதைய ரொம்ப அழகா சொல்ல முடியாது. ஈஷல், ஒரசல் இல்லாம, காமம் இல்லாம, ஐ லவ் யூக்கள் இல்லாம, முத்தங்கள் இல்லாம, சுத்தமான ஒரு காதல் கதைய சொல்ல எழுத்துல முதிர்ச்சி வேணும். இந்த படத்துல அது தேவைக்கு அதிகமாவே இருந்துச்சு.

முதல் காதலோட அழகே, காமம் துளியும் எட்டிப்பார்க்காத பருவத்துல அது தொடங்கும். பப்பி லவ்னு பரவலா சொல்லப்படுற பள்ளிப்பருவ காதல வெளிப்படுத்தவே தனி தைரியம் வேணும். நேரா நின்னு பேச முடியாது. கை கால் லாம் ஒதறும். வாய் வெட வெடனு நடுங்கும். பேச வராது. நார்மலாவே இருக்க மாட்டோம்.

ராமும் விதிவிலக்கல்ல.

அந்தப்பக்கம், எப்படி பாத்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல சம்மந்தப்பட்ட பொண்ணுக்கு, இவனுக்கு, தான் மேல ஏதோ இருக்குனு புரிஞ்ச அப்புறம், அவளுக்கும் புடிச்சிருந்தா அவ பார்க்குற பார்வையே வேற மாதிரி தான் இருக்கும்.

ஜானுவும் விதிவிலக்கல்ல.

ஜானு கை பட்டவுடனே ராமோட இதயம் பட படனு அடிக்கறதுல ஆரம்பிச்சி, ஜானு ராம் கிட்ட கன்னி கழிஞ்சிட்டானானு கேக்கறது வரைக்கும், பள்ளியில் நாம் கொண்ட முதல் காதலின் சின்ன சின்ன அழகான விஷயங்களின் தொகுப்பே இந்த காதல். ’96-ன் மிகப்பெரிய வெற்றியே, அவரவர்களோட முதல் காதல, ராமுக்குள்ளயோ, இல்ல ஜானுவுக்குள்ளயோ அப்பட்டமா பாக்கலாம். அவரவர்களின் அவனையோ அவளையோ படம் முழுதும் தொடர்புப்படுத்திக்கொள்ள முடிந்தது.

நான்கு நாட்களுக்கு பின் பள்ளி வந்ததும், ஜானு திரும்பி ராமை பார்க்கும் போது, ராம் மட்டுமல்ல, நாமும் ஜானுவின் மேல் காதல் கொள்கிறோம்.

விஜய் சேதுபதி, த்ரிஷாவின் முதிர்ந்த காதலைவிட பள்ளிப்பருவ காதல் காட்சிகளே மகிழ்ச்சியில் திளைக்க வைக்கின்றன. ராமும் ஜானுவுமாக நடித்தவர்கள் பள்ளிப்பருவத்தையும் முதல் காதலின் இயல்பையும் கண் முன் நிறுத்துகிறார்கள்.

ஜானு ராமின் மாணவர்களிடம் கதை எவ்வாறு சென்றிருந்தால் நன்றாக இருந்திற்கும் என்று கூறும் போது ராமோடு சேர்ந்து நாமும் உருகுகிறோம்.ராம் ஜானுவின் குரலால் "யமுனை நதியிலே" பாடலைக் கேட்க வேண்டும் என்று ஏங்குகிறான்.மின்சாரம் சென்றதும் ஜானு அப்பாடலைப் பாடும் போது ராம் தன் வாழ்வின் இருளில் இருந்து வெளிச்சத்தைத் தேடி ஓடிவதாய்க் காட்சி படுத்திய விதம் அழகிய கவிதை..பாடல் முடிந்தப் பின் மின்சாரம் வரும் போது தன் காதல் வெற்றி பெற்றதாக ராம் எண்ணும் இடம் நம் உதடுகளை ஒரு அடி வரை உயர்த்தும் அட்டகாசம்.இரவு மேம்பாலத்தில் ஜானு நெருங்கி நடக்க வரும் போது தள்ளி ஓடும் இடம்,ஜானுவின் தாலியை வணங்கும் இடம் என கன்னியம் மீறாமல் கதை சொன்ன இயக்குனருக்கு சபாஷ்.இறுதி காட்சியில் தன் முதல் காதலைப் பிரியா மனம் இல்லாமல் காரின் கீரைக் குறைக்க ஜானு முயலும் போது அடுத்தடுத்து கீர் போட்டு போகும் இடத்தில் நாம் இதிலிருந்து நகர்ந்து வாழ்வில் அடுத்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று ராம் ஜானுவிற்கு சொல்லாமல் உணர்த்துகிறான்.
படத்தின் முதல் காட்சியைப் பார்த்திருப்போம்.விஜய் சேதுபதி ஒரு கடற்கரை ஓரத்தில் "ராம் ஜானு" என்று எழுதி கொண்டிருப்பான்.அப்போது கேமரா கீழிருந்து மேலே செல்லும்.அது போல் படத்தின் இறுதி காட்சியிலும் ஜானு மீண்டும் தன் ஊருக்கு மேலே பறந்து செல்லுவாள்.கடைசியாக ராம் கொடியில் காய்ந்துக் கொண்டிருந்த ஜானுவின் ஆடைகளை மடித்து தன் பெட்டியில் வைத்து மூடுவான். அந்த பெட்டி ராமின் மனதில் என்றுமே வாழும் காதல் நினைவுகள்.பின் வெளியே வந்து நிற்கும் இடத்தில் "இதுவும் கடந்து போகும்" என்று உணர்த்துகிறான்.

ஜானுவும் ராமும் பிரியாம இருந்திருக்கக்கூடாதானு படம் முழுக்க நம்மளும் ஏங்குவோம்.

எத்தனையோ காதல் படங்கள் வந்திருந்தாலும், ’96-ம், ராமும் ஜானுவும், வாழ்வின் இறுதிவரை மறக்க முடியாத மறக்கக்கூடாத ஒன்று.

ராமுக்கும் ஜானுவுக்கும் இடையில் உள்ள காதல், வார்த்தைகளால் விவரிக்க முடியாத காதல்.
மொத்தத்தில் இந்த படம் நாம் மிகவும் சோர்ந்துப் போய் இருக்கும் நேரத்தில் நம் மீது வந்து அமரும் பட்டாம்பூச்சியைப் போன்றது.அது நம்மை அறியாமல் நம்மை புன்முறுவல் செய்ய வைத்து என்னை விட்டு நீங்காதே என்று சொல்ல வைக்கும்.

எல்லாத்தையும் ஏத்துக்க முடிஞ்சாலும்

நீ மட்டும் பேர ஞாபகம் வெச்சிருந்தா நல்லார்ந்துருக்குமே, வசந்தி.

காதலே காதலே!

Tagged in : 96 Movie review, vjs, trisha, love, Gokkul A, K Vigneshwar,