அலை கடலில் ஆனந்தம் கொள்ளும் உலகிற்கு ,
இந்த ஆழ்கடல் விரும்பி அந்நியனாகவே தெரிகிறான்...
ஆர்ப்பரிக்கும் கரையில் அமைதியை தேடும் தீவிரன் அனைவருக்கும் ஆபூர்வமாகவே தெரிகிறான்...
கால் நனைக்கும் கரையில் கண்ணீர் கரைக்கும் இவன் கறை படிந்தவனாகவே தெரிகிறான்...
எடுத்துப்போ என அனைத்தையும் அள்ளிக் கொடுத்து அமைதியாய் நிற்பவன் சிறையடைந்தவனாகவே தெரிகிறான்...
எதர்க்காகவோ எழுந்து எதையோ பற்றி யோசித்து அதையே தொலைத்து நிற்கும் இவன் ஏமாளியாகவே தெரிகிறான்...
அவன் அந்நியனில்லை
அவன் அபூர்வனில்லை
அவன் கறைபடிந்தவனில்லை
அவன் சிறையடைந்தவனில்லை
அவன் ஏமாளியில்லை
உள்ளம் உணர்ந்த எதார்தன் அவன் ...