The Guindy Times

The campus magazine of CEG, AC Tech and SAP

நகரும் நாட்கள்

Sreeja CP

January 24, 2018

நூறு நாட்கள் இந்தக் கல்லூரி தாயின் கருவில் வாழ்ந்து விட்டேன்...

 

பல உறவுகள்; பல பிரிவுகள்

 

பல ஊடல்கள்; பல காயங்கள்

 

அவை அனைத்தும்...

 

மனதை உடைத்து;  உயிரைக் குடித்து

என்னை வதைத்துவிட்டன....

 

இனிவரும் நாட்களில்...

 

வலிகள் குறைந்து;  காயங்கள் மறந்து

பிரிவுகள் அழிந்து மகிழ்ச்சியுடன் இருக்க...

 

இறைவா உன்னை வேண்டுகிறேன்...